செவ்வாய், 9 ஏப்ரல், 2019

பாஜக தேர்தல் அறிக்கையில் நதிகள் இணைப்பு -ரஜினிகாந்த் வரவேற்பு


தினத்தந்தி :  சென்னை போயஸ் கார்டனில் நடிகர் ரஜினிகாந்த் நிருபர்களுக்கு பேட்டி
அளித்தார். கமலுக்கு ஆதரவா என்ற கேள்விக்கு ரஜினிகாந்த், என்னுடைய அரசியல் நிலைப்பாட்டை ஏற்கனவே அறிவித்து விட்டேன். அதில் எந்த மாற்றமும் இல்லை. ஏதாவது வெளியிட்டு எனக்கும் கமலுக்கும் உள்ள நட்பை கெடுத்து விடாதீர்கள் என கூறினார். மேலும் அவர் கூறும்போது, பாஜக தேர்தல் அறிக்கையில் நதிகள் இணைப்புக்கு தனி ஆணையம் என கூறப்பட்டு உள்ளதை வரவேற்கிறேன். நான் நீண்ட நாட்களாக நதிகளை இணைப்பது குறித்து சொல்லிக் கொண்டு இருக்கிறேன். நதிகள் இணைந்தால் நாட்டின் வறுமை ஒழிந்து விடும். கோடிக்கணக்கான பேருக்கு வேலைகிடைக்கும். பாஜக கூட்டணி ஆட்சி அமைந்தால் உடனடியாக அவர்கள் அதை செய்ய வேண்டும் என கூறினார்
LR Jagadheesan இந்தா நரி ஊளையிட்டுருச்சில்ல. காரியம் ஆகணும்னா கரெக்டா பொந்துலேர்ந்து வெளில வரும். ஊளையிடும். மறுபடி பொந்துக்குள்ள போயிரும்.

இப்படித்தான் 2014 தேர்தல்ல வி ஆர் கிருஷ்ணய்யர்ங்குற முற்போக்காளர்களின் மனம் கவர் மடாதிபதி மோடி ஆட்சியில் சூரிய ஒளி மின்சார உற்பத்தி பெருகும்னு ஜோசியம் சொல்லி மோடிக்கு ஒத்து ஊதினாரு. அவரு நேரா சூரியனின் திருவடிக்கு போனது தான் மிச்சம்.
இந்தாளு நதிநீர் இணைப்புன்னு ரொம்பநாளா படம் காட்டிகிட்டிருக்காரு. ஜனங்க சாகறதை பத்தி யாருக்கு என்ன கவலை?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக