திங்கள், 15 ஏப்ரல், 2019

கம்பனிகளின் 9 அதிகாரிகளை அமைச்சுக்களில் பணிக்கு அமர்த்திய மத்தியரசு . ஆட்சி முடிய முதல் அவசர அநியாயம்! ..

Jeya Kumar : போகிற போக்கில் மிக முக்கியமான மாற்றத்தை மோடி அன்கோ செய்துள்ளது.
 அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உயர் பதவிகளுக்கு அந்தந்த துறை சார்ந்த வல்லுனர்களை குறுகிய கால அடிப்படையில் இணை சாளர வழியில் தேர்ந்தெடுப்பார்கள். lateral entery method.
மோடி அன்கோ இந்த லேட்டரல் என்ட்ரி - இணைசாரள முறையில் 9 வல்லுனர்களை வேளாண் இணை செயலர்களாக நியமித்துள்ளது.
 இதனால் என்ன பிரச்சனை என்கிறீர்களா..?
முதலில் சமூக நீதி பிரச்சனை....
அடுத்த சிக்கல் இவர்கள் யாருடைய நலனுக்காக இருப்பார்கள்? அமெரிக்காவில் மரபணு மாற்றும் பயிர்களை அமெரிக்க வேளாண் துறை பல காரணங்களைச் சொல்லி தொடர்ந்து அனுமதி மறுத்து வந்தது.
மரபணு ஒரு புரதம். ஆகவே புரதம் சார்ந்த பல ஆய்வுகளை நடத்தச் சொல்லி கட்டாயப்படுத்தியது. புதிதாக நுழைக்கப்பட்ட புரதம் ஏற்கெனவே உள்ளே இருக்கும் புரதங்களில் ஏற்படுத்தும் மாற்றங்கள் பற்றியும் ஆராயச் சொன்னது - (புரோட்டியோனாமிக்ஸ் ஆய்வுகள்). மேலும் புதிய மரபணு ஏற்படுத்தும் மாற்றங்கள் பற்றியும் ஆராயச் சொன்னது. இப்படியாக காலம் சென்று கொண்டேயிருந்த்து.
இந்த சூழ்நிலையில் தான் இது நடந்தது.
மான் சான்டோவின் முன்னாள் சட்டப்பிரிவு தலைவர் இப்படி உள்ளே நுழைகிறார்..
அவர் மரபணு மாற்றுப் பயிர்களுக்கான அனுமதி கோப்பில் இப்படி எழுதுகிறார், ‘ மரபணு மாற்றுப் பயிர் புதிதாகச் சேர்க்கப்பட்ட மரபணு ஒரு புரதம் மட்டுமே. வெறும் புரதம் மட்டுமே. இது substantially equivalent one என்றார். அதாவது உள்ளே உள்ள பல ஆயிரம் புரதங்களுக்கு இணையானது என்று கூறி அனுமதி அளித்தார்.


சில காலம் சென்று இவர் மீண்டும் மான்சான்தோவில் பணியில் அமர்ந்தார்.

தங்களுக்கு ஏற்ற வகையில் அனுமதிகளை, மாற்றங்களை உருவாக்கிட இந்த வழியைப் பெரு நிறுவனங்கள் தத்தமது துறையில் பயன்படுத்துகின்றன.

இதை ரிவால்விங் டோர் முறை - revolving door method, என்பர்.

(இரண்டு பக்கமும் திறக்கும். சுழல் கதவாகவும் இருக்கும். இந்தப் பக்கம் உள்ளே நுழைந்து அந்தப் பக்கமா வெளியே போவது.)

அதாவது போகிற போக்கில் அரசு நிர்வாகத்தில் மிக முக்கியமான, வணிக நிறுவனங்களுக்கு கேற்ற கொள்கை முடிவெடுக்கும் இடத்தில் அமர வைக்கிறார்.

மீண்டும் தன்னை நல்ல சௌகிதார் என்பதை நிரூபித்திருக்கிறார்.

பச்சை அயோக்கியத்தனம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக