tamil.indianexpress.com ;திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ளது
முத்தையாம்பாளையம். இங்குள்ள கருப்பசாமி கோயிலில் வருடந்தோறும் சித்ரா பெளர்ணமி சிறப்பாகக் கொண்டாடப்படும். அதன்படி இந்தாண்டும் திருவிழா கொண்டாடப்பட்டது. திருவிழாவின் ஒரு பகுதியாக பிடிக்காசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பிடிக்காசை பிடிக்க பக்தர்கள் முண்டியடித்தனர். இதனால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். இதில் 4 பேர் பெண்கள், 3 பேர் ஆண்கள். 10-க்கும் அதிகமானோர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கோயில் திருவிழாவில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் திருச்சி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், திருவிழாவில் சிக்கி உயிரிழந்த 7 பேரின் குடும்பங்களுக்கும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலா 1 லட்சம் ரூபாய் நிவாரண நிதி அறிவித்துள்ளார். அதைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி, உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் நிவாரண உதவி அறிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக