வெள்ளி, 26 ஏப்ரல், 2019

கோவையில் கைது செய்யப்பட்ட 6 பேர் கொடுத்த தகவல்.. எச்சரித்தும் இலங்கை அலட்சியம் ...

tamil.oneindia.com - VelmuruganP. டெல்லி: கோவை ஐஎஸ் தீவிரவாதிகள் கொடுத்த தகவலை வைத்து மத்திய அரசு இலங்கையை எச்சரித்துள்ளது. ஆனால் முன்னெச்சரிக்கையுடன் இலங்கை செயல்படாமல் கோட்டைவிட்டது தற்போது தெரியவந்துள்ளது.
இலங்கையில் கடந்த ஞாயிறு அன்று ஈஸ்டர் பிரார்த்தனை நடந்த 3 தேவாலயங்கள் மற்றும் 3 நட்சத்திர விடுதிகள் உள்பட 8 இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில் 359 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர்.
இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இலங்கையில் பயங்கரவாத பயிற்சிபெற்ற 160 தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக பத்திரிக்கை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதையடுத்து இலங்கை முழுவதும் பாதுகாப்பு படையினரின் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள்
இதனிடையே கோவையில் இந்து மத தலைவர்களை குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக ஐஎஸ் ஆதரவாளர்கள் 6 பேர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். தீவிரவாதியுடன் தொடர்பு தீவிரவாதியுடன் தொடர்பு அப்போது அவர்களுக்கு இலங்கை தாக்குதலுக்கு முக்கிய காரணமான தீவிரவாதி ஜஹரான் ஹஸிமுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இலங்கை, தமிழ்நாடு மற்றும் கேரளாவில் இளைஞர்களை மூளைச்சலவை செய்யும் ஹஸிமின் பிரச்சாரங்கள் அடங்கிய வீடியோக்களை அவர்கள் வைத்திருந்தார்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக