மாலைமலர் : இலங்கையில் அதிரடிப்படையினர் நடத்திய
தேடுதல் வேட்டையில், ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 3 பேர் கைது
செய்யப்பட்டனர் என போலீசார் தெரிவித்தனர்.
இந்த தாக்குதலில் 359 பேர் உயிரிழந்தனர். மேலும் 500-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். தாக்குதல்கள் தொடர வாய்ப்புள்ளது. ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகளுடன் இலங்கையில் மேலும் பலர் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து, அங்கு வாகன சோதனை, தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
நேற்று காலை நடத்தப்பட்ட வாகன சோதனையில் மேலும் ஒரு வெடிகுண்டு கண்டறியப்பட்டது. இந்நிலையில், இலங்கையின் கொழும்பு கடற்கரை முகத்துவாரம் பகுதியில் அதிரடிப்படையினர் இன்று சோதனை நடத்தினர். இதில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு, சிறப்பு அதிரடிப்படை ஆகியோர் மேற்கொண்ட சோதனையில் ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த3 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் இருந்து 21 கையெறி குண்டுகள் மற்றும் 6 வாள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதேபோல், இலங்கையின் நுவரெலியா நகரில் நடந்த சோதனையில் 200 டெட்டனேட்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டன என காவல்துறை தெரிவித்துள்ளது
கொழும்பு:
இலங்கை
தலைநகர் கொழும்புவில் கடந்த ஞாயிறன்று பயங்கரவாதிகள் நிகழ்த்திய தொடர்
வெடிகுண்டு தாக்குதலில் தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்கள் தகர்க்கப்பட்டன.
இந்த தாக்குதலில் 359 பேர் உயிரிழந்தனர். மேலும் 500-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். தாக்குதல்கள் தொடர வாய்ப்புள்ளது. ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகளுடன் இலங்கையில் மேலும் பலர் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து, அங்கு வாகன சோதனை, தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
நேற்று காலை நடத்தப்பட்ட வாகன சோதனையில் மேலும் ஒரு வெடிகுண்டு கண்டறியப்பட்டது. இந்நிலையில், இலங்கையின் கொழும்பு கடற்கரை முகத்துவாரம் பகுதியில் அதிரடிப்படையினர் இன்று சோதனை நடத்தினர். இதில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு, சிறப்பு அதிரடிப்படை ஆகியோர் மேற்கொண்ட சோதனையில் ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த3 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் இருந்து 21 கையெறி குண்டுகள் மற்றும் 6 வாள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதேபோல், இலங்கையின் நுவரெலியா நகரில் நடந்த சோதனையில் 200 டெட்டனேட்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டன என காவல்துறை தெரிவித்துள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக