வெள்ளி, 15 மார்ச், 2019

Tamilnadu's Lydian Nadhaswaram Wins $1M Prize - தமிழக லிடியன் நாதஸ்வரம்.. 1 மில்லியன் டாலர் பரிசு The World's Best வீடியோ


மின்னம்பலம் : உலகம் முழுவதிலும் கவனம் பெற்ற தி வேர்ல்ட்’ஸ் பெஸ்ட்’ நிகழ்ச்சி அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொண்டு 1 மில்லியன் டாலர் பரிசுத் தொகையை வென்றுள்ளார் சென்னையைச் சேர்ந்த லிடியன் நாதஸ்வரம் என்ற சிறுவன்.
 பிப்ரவரி மாதம் துவங்கப்பட்ட ‘தி வேர்ல்ட்’ஸ் பெஸ்ட்’ நிகழ்ச்சியில் பல்வேறு நாடுகளிலிருந்து கலைஞர்கள் குழுவாகவும், தனி நபராகவும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் சென்னையைச் சேர்ந்த பியானோ கலைஞரான சிறுவன் லிடியன் நாதஸ்வரமும் கலந்து கொண்டார்.
ஆரம்பம் முதலே, தனது அசாத்திய திறமையால் ரசிகர்கள் பலரின் பாராட்டுதலை தொடர்ந்து பெற்று வந்த இவர் இறுதிச் சுற்றில் சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறார்.
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நடுவர்கள் பங்கேற்ற இறுதி நிகழ்ச்சியில் இரண்டு பியானோக்களை ஒரே நேரத்தில் வாசித்து இசை கலைஞர்களை மகிழ்வித்து பட்டத்தை வென்ற லிடியனுக்கு 1 மில்லியன் டாலர் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக