சனி, 23 மார்ச், 2019

தேமுதிகவுக்கு பணம் இன்னும் வரவில்லை ... வந்தாலும் வேட்பாளர்களுக்கு கிடைக்குமா?

தினமலர் : தேர்தல் செலவுக்கு, கட்சி தலைமை பணம் வழங்கும் என்ற எதிர்பார்ப்புடன், தே.மு.தி.க., வேட்பாளர்கள் காத்திருக்கின்றனர். லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில், வட சென்னை, கள்ளக்குறிச்சி, விருதுநகர், திருச்சி ஆகிய, நான்கு தொகுதிகளில், தே.மு.தி.க., போட்டியிடுகிறது.
கள்ளக்குறிச்சியில், விஜயகாந்த் மைத்துனர் சுதீஷ் வேட்பாளராக களமிறங்கியுள்ளார். விருதுநகரில், அழகர்சாமி; வட சென்னையில், மோகன்ராஜ்;திருச்சியில், டாக்டர் இளங்கோவன் ஆகியோர் போட்டியிடு கின்ற னர். இதில், சுதீஷை தவிர, மற்ற மூன்று வேட்பாளர்களும் வசதி குறைந்தவர்கள்.

தர்மபுரியில், ஏற்கனவே நடந்த நகராட்சி தலைவர், லோக்சபா, சட்டசபை தேர்தல்களில் போட்டியிட்டதால், வேட்பாளர் இளங்கோவன், நிதி நெருக்கடியில் உள்ளார்.
 வட சென்னை வேட்பாளர் மோகன்ராஜ், கடனில் சிக்கி தத்தளித்து வருகிறார். கட்சி தலைவர் விஜயகாந்தின் உத்தரவுக்கு கட்டுப் பட்டு, அழகர்சாமி, இந்த சுமையை ஏற்று உள்ளார். வட சென்னை, கள்ளக்குறிச்சியில், தி.மு.க.,வை எதிர்த்து, தே.மு.தி.க., போட்டி இடுகிறது. திருச்சி மற்றும் விருதுநகரில், காங்கிரஸ் கட்சியை எதிர்த்து, களம் காண்கிறது. தி.மு.க., - காங்., கட்சி களுக்கு இணையாக செலவு செய்ய, தே.மு.தி.க.,வின், மூன்று வேட்பாளர்களும் திணறி வருகின்றனர்.

அ.தி.மு.க., கூட்டணி கட்சி நிர்வாகிகள், பூத் செலவு, தேர்தல் பணிமனை செலவு, பிரசார செலவு என, வேட்பாளர்களை கசக்கி பிழிய ஆரம்பித்துள்ளனர். எனவே, கட்சி தலைமை, எப்போது பணம் தரும் என எதிர்பார்த்து, மூன்று வேட்பாளர்களும் காத்திருக்கின்றன

-நமது நிருபர்-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக