செவ்வாய், 26 மார்ச், 2019

பொள்ளாச்சி பலாத்காரம்.. கொலை ..புதைத்தார் திருநாவுக்கரசு.. புதிய ஆடியோ - வீடியோ


tamil.oneindia.com - lakshmi-priya.: திருநாவுக்கரசை எனக்கு தெரியாது.. மயூரா ஜெயக்குமார் விளக்கம்- வீடியோ
கோவை: பொள்ளாச்சியில் திருநாவுக்கரசும் அவருடைய நண்பர்களும் சேர்ந்து இளம்பெண் ஒருவரை விடிய விடிய பலாத்காரம் செய்ததால் உயிரிழந்த அந்த பெண்ணின் சடலத்தை பண்ணை வீட்டின் பின்புறத்தில் புதைத்துள்ளதாக புதிய ஆடியோவில் ஒரு பெண் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.
பொள்ளாச்சியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இளம்பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. விசாரணையில் திருநாவுக்கரசு உள்ளிட்ட 4 பேர் இளம்பெண்களை காதல் வலையில் விழ வைத்து அவர்களை பண்ணை வீட்டுக்கு அழைத்து சென்று நண்பர்களுடன் கதற கதற பலாத்காரம் செய்து அதை வீடியோவாக எடுத்து வைத்து மிரட்டி வந்ததும் தெரியவந்தது.

மேலும் அந்த பெண்களை மிரட்டி மீண்டும் மீண்டும் உறவு கொள்வதும் பணம் பறிப்பதும் இவர்களின் தொழிலாக இருந்துள்ளது. இதையடுத்து புகார் அளித்த பெண்ணின் உறவினர்கள் அடித்து உதைத்து அந்த கும்பலை சேர்ந்த 4 பேரை போலீஸில் ஒப்படைத்தனர்.





வாக்குமூலம்

இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் திருநாவுக்கரசுவிடம் விசாரணை நடத்தியதில் கைது செய்யப்பட்ட சபரிராஜன் மட்டும் இதுவரை 60 பெண்களின் வாழ்க்கையை நாசம் செய்து வீடியோ எடுத்து வைத்துள்ளதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.




தொலைபேசி எண்கள்

இந்த வழக்கை சிபிஐக்கு ஒப்படைக்க அரசு முடிவு செய்துள்ளது. அதற்கான அரசாணையும் அனுப்பப்பட்டுவிட்டது. இதுதொடர்பாக பல வீடியோக்கள் வெளியாகியுள்ளன. இந்த வழக்கு தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் கூற தொலைபேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன.




புது பெண் குரல்

இந்த நிலையில் சமூகவலைதளங்களில் ஒரு பெண் பேசும் ஆடியோ வைரலாகி வருகிறது. அதில் அவர் பேசுகையில் நான் திருநாவுக்கரசால் பாதிக்கப்பட்டவள். அவருடன் மொத்தம் 8 பேர் உள்ளனர். இவர்கள் பெண்களை மயக்கி பண்ணை வீட்டுக்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்வதே வேலையாகும்.




அவ்வாறு நாங்கள் 4 பெண்கள் ஏமாந்து பண்ணை வீட்டில் இருந்த போது ஒரு சிறிய பெண்ணை அழைத்து வந்து அந்த பெண்ணை விடிய விடிய பலாத்காரம் செய்ததால் வலி தாளமுடியாமல் அந்த பெண் இறந்துவிட்டார்.



பண்ணை வீட்டில் புதைத்த சம்பவம்

இதையடுத்து அந்த 8 பேரும் சேர்ந்து அந்த பெண்ணை பண்ணை வீட்டுக்கு பின்புறமாக புதைத்து விட்டனர். இதை வெளியே சொல்லக் கூடாது என எங்களையும் மிரட்டினர். எப்படியோ நாங்கள் 4 பேரும் அந்த கும்பலிடம் இருந்து தப்பி வந்தோம். இந்த உண்மையை உங்களால் முடியும் வரை பகிருங்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக