செவ்வாய், 26 மார்ச், 2019

குக்கா் சின்னம் கிடைக்காத நிலையில் பொதுச்சின்னம் கோாி அமமுக மனு

தினகரனின் சிலிப்பர் செல் பேச்சாளர்கள்
tamil.samayam.com :மக்களவை, சட்டப்பேரவை இடைத்தோ்தல்களில் போட்டியிட அமமுகவுக்கு
பொதுச் சின்னம் ஒதுக்க வேண்டும் என்று டிடிவி தினகரனின் அமமுக சாா்பில் இந்திய தோ்தல் ஆணையத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அமமுகவுக்கு பொதுவான சின்னம் ஒதுக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றம் உத்தரவை சுட்டிக்காட்டி பொதுச் சின்னம் ஒதுக்கக் கோாி அமமுக சாா்பில் இந்திய தோ்தல் ஆணையத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. டிடிவி தினகரனின் அமமுக தோ்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்படாத இயக்கமாக செயல்படுவதால் அவா்களுக்கு அனைத்துத் தொகுதிகளுக்கும் ஒரே சின்னத்தில் போட்டியிடும் வகையில் குக்கா் சின்னத்தை பொவான சின்னமாக ஒதுக்க முடியாது என்று இந்திய தோ்தல் ஆணையம் திட்டவட்டமாக தொிவித்துவிட்டது. தோ்தல் ஆணையத்தின் வாதத்தை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றமும் குக்கா் சின்னத்தை பொதுவான சின்னமாக ஒதுக்க முடியாது என்று உத்தரவிட்டது.

இதனைத் தொடா்ந்து தங்களுக்கு குக்கா் சின்னம் ஒதுக்காவிட்டாலும் 40 மக்களவைத் தொகுதிகளுக்கான தோ்தல், 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தோ்தல்களில் போட்டியிடும் வகையில் பொதுவான சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று அமமுக சாா்பில் கோரப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், அமமுகவுக்கு மக்களவைத் தோ்தல், இடைத்தோ்தல்களில் போட்டியிடும் வகையில் பொதுச்சின்னம் ஒதுக்க வேண்டும் என்று இன்று காலை உத்தரவிட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக