ஞாயிறு, 31 மார்ச், 2019

கோவை சிறுமி பாலியல் கொலைகாரன் சந்தோஷ் பாஜகவின் பாரத் சேனா அங்கத்தவன்

 T-shirt, which was put on the child...sathoskumar confessionnakkheeran.in - kalaimohan : கோவையில்  6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் கோவை தொண்டாமுத்தூரை சேர்ந்த சந்தோஷ் குமார் என்பவனை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த கைதுக்குப் பிறகு சந்தோஷ்குமாரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவன் தான்தான் சிறுமியை பாலியல் வன்கொடுமை  செய்து கொலை செய்தேன் என ஒப்புக் கொண்டதாக  தகவல்கள் வந்துள்ளன. கோவை துடியலூரில் சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டு கொலை
செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தடாகம் போலீசார் விசாரித்து வந்த நிலையில், துடியலூர் மகளிர் காவல் நிலையத்திற்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. மேலும் கோயம்புத்தூர் எஸ்பி உத்தரவின் பேரில் 13 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் போலீசார் சுமார் 200க்கும் மேற்பட்ட நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் எந்த துல்லியமான ஆதாரங்களும் இந்த வழக்கில் கிடைக்காமல் திணறிய போலீசார் இன்று காலை கோவை தொண்டாமுத்தூரை சேர்ந்த சந்தோஷ் குமார் என்பவனை கைது செய்தனர். சம்பவம் நடந்த அன்று சிறுமியின் வீட்டின் அருகில் ஒரு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த சந்தோஷ் அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததும் தெரிய வந்துள்ளது. அந்த சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டபோது அந்த  சிறுமி மீது போடப்பட்டிருந்த டி-ஷர்ட்டும் அவனுடையதுதான் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.



மேலும் விசாரணையில் தான் மட்டுமே இந்த குற்றத்தில் ஈடுபட்டதாக சந்தோஷ்குமார் வாக்குமூலம் அளித்துள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர். தொண்டாமுத்தூரை சேர்ந்த சந்தோஷ் குமார் அவருடைய மனைவியை பிரிந்து புலியுமுத்தூர்  பகுதியில் வசித்து வந்திருக்கிறான்.  அவ்வப்போது அவனது பாட்டி வீடான கஸ்தூரிநாயக்கன்பாளையம் புதூருக்கு வந்து சென்றதாகவும் தெரியவந்துள்ளது.

nn

mm

இந்நிலையில் சிறுமி காணாமல் போன அன்று சந்தோஷ்குமார் சம்பவ இடத்தில் இருந்ததற்கான ஆதாரமாக அப்பகுதியில் உள்ள செல்போன் டவரில் அவனது செல்போன் எண்  பதிவாகியிருந்தது. இதனை அடுத்து போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட சந்தோஷ்குமார் சிறுமி மீது போடப்பட்டிருந்த டீசர்ட் தன்னுடைய தான் என ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

மதவாத எதிர்ப்பு பிரச்சாரம் : கோவை பன்னிமடை 6 வயது குழந்தையை தனது தாய் வீடான கோவை உடையம் பாளையம் சென்று விடுவதும் , பின்னர் பெரியவர்களை அழைத்து சென்று தனது மனைவியை சமாதானம் செயது மீண்டும் உள்ளியம் பாளையம் அழைத்து வந்து அடிப்பதும் தொடர்கதையான நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மனைவியை அடித்ததால் மனைவி மீண்டும் தனது தாயார் வீடான உடையம்பாளையம் சென்றுள்ளார் , இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் மனைவியின் தாயார் வீட்டுக்கு சென்று தங்கி இருந்த போது தனது பாட்டி பன்னிமடை கிராமத்தில் இறந்து போகவே சந்தோஷ் குமார் பன்னிமடை சென்று உள்ளார் , இதையடுத்து அன்று மாலையில் கடைக்கு சென்ற பச்சிளம் குழந்தையை இவ்வாறு கொடூரமான முறையில் தனது நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்தது தெரியவந்துள்ளது.விசாரணையை விரிவுபடுத்துமா காவல் துறை?
பாலியல் பலாத்கார செய்து படுகொலை செய்யப்பட்டதில் கோவை தொண்டாமுத்தூர் உள்ளியம் பாளையத்தை சார்ந்த சந்தோஷ் (34) என்பவன் கைது செய்யபட்டுள்ளான் , இவனை குறித்து நாம் விசாரித்த போது 34 வயதான இவன் BJP-ன் இளைஞர் அமைப்பான பாரத் சேனா என்ற அமைப்பை சார்ந்தவன் என்பதும் இவனுக்கு 7 ஆண்டுகளுக்கு முன்பு கோவை உடையம்பாலையத்தை சார்ந்த பெண்ணுடன் திருமணம் நடைபெற்றதும் , திருமணமான நாள் முதல் மனைவியை கஞ்சா குடித்து விட்டு அடிப்பதும் வாடிக்கையான நிலையில் இவனது மனைவியானவர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக