ஞாயிறு, 10 மார்ச், 2019

மாணவிகளை சீரழித்த பாலியல் குற்றவாளிகளை கண்டுகொள்ளாத .. தொலைக்காட்சிகள் ..

LR Jagadheesan : தமிழ்நாட்டின் சமூக சீரழிவு மற்றும் பொருளாதார < சூறையாடல் என்கிற இரண்டு விபரீதங்களுக்கும் ஒருசோற்றுப்பதமான இந்த இரண்டு செய்திகள் குறித்தும் இன்றுமாலை எந்தெந்த 24/7 செய்தித் தொலைக்காட்சிகள் விவாதிக்கப்போகின்றன? எந்தெந்த அறிவுஜீவி பேசப்போகிறார் என்று பார்க்க ஆவலாக காத்திருக்கிறோம். எந்தெந்த அறிவுசீவி தமது சமூக ஊடகத்தில் கருத்து சொல்லிக் களமாடப்போகிறார்? என்று தெரிந்துகொள்வதிலும் கூடுதல் ஆர்வமாய் இருக்கிறோம்.
இந்த இரண்டிலும் திமுகவின் கடைசி மட்ட தொண்டன் ஒருவன் தொடர்புபட்டிருந்தாலும் இந்நேரம் டில்லி தொலைக்காட்சிகளே ஓங்காரமாய் ஓலமிட்டிருக்கும்.
ஆனால் தமிழக முதல்வரின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் சொந்த மாவட்ட கட்சிக்காரர்கள் தொடர்புடைய செய்தி ஒன்று. மற்றது அந்த எடப்பாடியின் “அரசியல் அம்மா”மட்டுமல்ல தமிழ்நாட்டு ஊடகங்களும் “அம்மா” என்றழைத்த தர்மத்தாயும் நேரடியாக தொடர்புபட்டதாக கூறப்படும் செய்தி. இந்த இரண்டு செய்திகள் குறித்து தமிழ்நாட்டு “மையநீரோட்ட ஊடகங்களோ” அரசியல் விமர்சக விற்பன்னர்களோ நடுநிலை நல்லவர்களோ காக்கும் மௌனத்தை என்ன சொல்லி அழைக்க? கள்ள மௌனம் என்றா? காரிய மௌனம் என்றா?

நிர்மலாதேவிக்கு எதிராக பொங்கிய வாய்கள் இதில் மௌனித்துப்போனதேன்? 2ஜி விஷயத்தில் களமாடியவர்கள் ஒட்டுமொத்த இந்திய வைர சந்தையையை நிலைகுலையவைத்த இமாலய ஊழல் குறித்து பேசமறுப்பதேன்?
வைரங்களாக மாற்றியது மட்டுமே இத்தனை கோடிகள் என்றால் வெவ்வேறுவடிவங்களில் பதுக்கப்பட்டிருக்கும் பணத்தின் மதிப்பென்னவாக இருக்கக்கூடும்? எத்தனை லட்சம் கோடிகள்?
அதிமுக ஆட்சிக்காலத்தில் அதிகரித்த தமிழக அரசாங்க கடன் தொகைக்கும் அதிமுக ஆட்சியாளர்களின் சொத்து வளர்ச்சிக்கும் இடையிலான நேரடித்தொடர்பை விசாரித்தாலே போதுமே நடந்திருக்கும் பகற்கொள்ளையின் அளவென்ன என்று தெரிந்துகொள்ள. அதை செய்யப்போவது யார் என்பதே நாம் எழுப்பவேண்டிய அதிமுக்கிய கேள்வி.
https://m.timesofindia.com/…/price…/articleshow/68191985.cms

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக