ஞாயிறு, 10 மார்ச், 2019

அன்வர் ராஜா பாஜகவுடன் எப்படி கூட்டணி வைக்கலாம்.. வீடியோ ..அதிமுகவினரை விரட்டிய ஊர் மக்க


பாஜகவுடன் எப்படி கூட்டணி வைக்கலாம்.. அன்வர் ராஜா” அதிமுகவினரை விரட்டிய ஊர் மக்கள்! By Hemavandhana
சென்னை:“பாஜகவுடன் எப்படி கூட்டணி வைக்கலாம், முதல்ல வெளியே போங்க.. இது எங்க ஏரியா” என்று கேட்டு எம்பி அன்வர்ராஜா உள்ளிட்ட அதிமுகவினரை ஊர்மக்கள் விரட்டியடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முத்தலாக் சட்டத்தை எதிர்த்து நாடாளுமன்றத்தில் “இந்த சட்டம் காட்டுமிராண்டித்தனமானது, இறைவனுக்கு எதிரானது” என்று உயர்த்தி குரல் கொடுத்தவர்தான் அன்வர் ராஜா. பிறகு தன் ஊரிலேயே நின்று தேர்தலில் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக சமீபத்தில் ஒருநாள் திடீரென யாகம் வளர்த்தார்.
இஸ்லாமிய மரபுகளுக்கு எதிராக செயல்பட்டதாக பல்வேறு தரப்பினரையும் கூட அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
அன்வர் ராஜாவை உடனே வக்பு வாரிய தலைவர் பதவியில் இருந்து தமிழக அரசு நீக்க வேண்டும் என்று இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக அவருக்கு கோரிக்கையும் விடுக்கப்பட்டது.

இதன்பிறகுதான் பாஜக-அதிமுக கூட்டணி முடிவானது. இதுகுறித்து பாஜகவை தொடர்ந்து எதிர்த்து வந்த அன்வர் ராஜாவிடம் கருத்து கேட்கப்பட்டது. அதற்கு, “தமிழகத்தில் ஆட்சியை தக்க வைக்கத்தான் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளோம். தேர்தலுக்கான தற்காலிக ஏற்பாடுதான்” என்று அப்பட்டமாகவே சொன்னார்.

இப்படி தொடர்ந்து மாறி மாறி சர்ச்சை ஏற்படுத்தி வரும் அன்வர் ராஜாவினால் அதிருப்திகள் ஏற்பட்டுள்ளன. அதிமுக கூட்டமா, அல்லது வேறு ஏதாவது கட்சி பணியோ தெரியாது, பாம்பன் தெற்குவாடி பகுதியில் அன்வர்ராஜா காரில் வந்து இறங்கினார். ஆதரவாளர்களுடன் வந்த அன்வர்ராஜாவை அங்கிருந்த மக்கள் வளைத்து சுற்றி கொண்டனர்.

“எப்படி பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்? இங்க எதுக்கு வர்றீங்க, அப்படியே கிளம்பி போயிடுங்க.. கட்சியில சீனியர்னு இருக்கிறவரைக்குதான் மரியாதை தருவோம்” என்று கத்தி கூச்சலிட ஆரம்பித்தனர். இதை கண்ட அன்வர்ராஜா ஆதரவாளர்களோ அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

“மரியாதையா இங்கிருந்து போயிடுங்க.. வெளியே போயிடுங்கா முதல்ல.. ” என்று ஊர்மக்கள் திரண்டதும் அன்வர்ராஜா உள்ளிட்டவர்கள் இதை எதிர்பார்க்கவே இல்லை. பிறகு வந்த காரிலேயே அப்படியே ஏறி திரும்பி சென்றனர். அதிமுக-பாஜக கூட்டணி வைத்ததால் எம்பி உட்பட அதிமுக ஆதரவாளர்களை விரட்டியடித்த சம்பவம் வீடியோவாக வெளிவந்து வைரலாகி வருகிறது. tamiloneindia

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக