ஞாயிறு, 3 மார்ச், 2019

தொல்.திருமாவளவன் : ஜாதி சங்கங்களை அரசியல் கட்சியாக்கிய மருத்துவர் ராமதாஸ் . வீடியோ



தொல்.திருமாவளவன் : எல்லா அமைப்புக்களும் கட்சிகளும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான ஒருமித்த கருத்தோடு போராடிகொண்டிருந்த நேரத்தில ராமதாஸ் வந்து நாடக காதல் . ஜீன்ஸ் பாண்டு . கூலிங் கிளாசு என்று எல்லா ஜாதி அமைப்புக்களையும் நீ வா நீ வா என்று .. தர்மபுரியில போய் வன்முறைய தூண்டி மூன்று கிராமங்களை தீ வைத்து கொழுத்தி பெரிய கலவரத்தை உண்டாக்கினார்
எல்லா அமைப்புக்களும்... அதிமுகவும் திமுகவும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக போராடி கொண்டிருந்த நேரத்தில் ஒட்டு மொத்த தமிழ்நாட்டின் திசைவழி போக்கையே மாற்றினர் ராமதாஸ்.
அதுவரை ஈழத்தமிழர்களை பற்றி பேசிக்கொண்டிருந்தவர்கள் எல்லாம் தருமபுரி கலவரம் பற்றி பேச தொடங்கிட்டாங்க .
அதன் பின் தலித்துக்களுக்கு எதிரா தமிழ்நாட்டில எல்லா இடத்திலையும் போய் 19 பெரிசா 81 பெரிசா.. வா மோதிப்பாக்கலாம் வா என்று தமிழ்நாட்டில இருக்கிற எல்லா ஜாதி அமைப்புக்களையும் அழைத்து நீங்க எல்லாம் வாங்க நாம வந்து திருமாவளவனுக்கு எதிரா யுத்தம் தொடங்கலாம்ன்னு ..
எதுக்கு சொல்ல வாரேன்னா . அடிப்படையில் ராமதாஸ் வந்த பிறகுதான் ஜாதிய வாதிகள் தலை தூக்க ஆரம்பிச்சாங்க .
ஜாதி சங்கங்கள் எல்லாம் அரசியல் கட்சி தொடங்க ஆரம்பிச்சாங்க
வன்னியர் சங்கம் பாமகவாயிச்சு
உடனே முதலியார் சங்கம் புதிய நீதி கட்சியாச்சு
உடனே யாதவர் சங்கம் மக்கள் தமிழ் தேசமாச்சு
உடனே முத்தரையர் சங்கம் தமிழர் பூமி இயக்கம்
கொங்கு வெள்ளாளர் சங்கம் கொங்கு மக்கள் கட்சி
தேவேந்திர வேளாளர் சங்கம் புதிய தமிழகம் ஆச்சு!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக