ஞாயிறு, 24 மார்ச், 2019

பௌத்தத்தின் ஜாதியம்... உயர்ந்த இருக்கைகள் .. தாழ்ந்த இருக்கைகள்

Arun Hemachandra : · பௌத்தத்தின் சாதியம்...
பௌத்தத்தைப் பின்பற்றாத ஏனைய இலங்கையர்கள் பொதுவாக பௌத்த துறவிகளுக்கு வழங்கப்படும் உயர் அந்தஸ்தைப்ப பற்றித் தமது கருத்துக்களை வெளிப்படுத்துவதுண்டு.
நிச்சயமாக அவர்கள் பார்க்க வேண்டிய புகைப்படமாகவே நான் இதனைக் கருதுகிறேன்.
குறித்த இப்படத்தில் பௌத்த துறவிகளில் உயரிய பீடத்தைச் சேர்ந்தவர்கள் இருந்தாலும், சியாம் நிக்காய என்ற பிரிவைச் சேர்ந்தவர்களுக்கே உயந்த இருக்கைகள் வழங்கப்பட்டிருக்கின்றது.
ஏனைய இரு பிரிவுகளான ராமான்ஞ்ய நிக்காய மற்றும் அமரபுர நிக்காய ஆகிய பிரிவுகளுக்கு தாழ்ந்த இருக்கைகள் வழங்கப்பட்டுள்ளன. நிக்காய என்ற பிரிவுகளுக்குள் சாதியக் கட்டமைப்பு இறுக்கமாகக் கடைப்பிடிக்கப்பப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதுவும் இலங்கையில் சமத்துவத்தை நோக்கிய பயணத்திற்குத் தடையாக விளங்கும் பிரதான காரணிகளுள் ஒன்று..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக