ஞாயிறு, 24 மார்ச், 2019

திருவள்ளூர் வேட்பாளரை மாற்றுக ;காங்கிரஸ் தொண்டர் தீக்குளிக்க முயற்சி

nakkheeran.in - ashokkumar" காங்கிரஸ் கட்சியில் திருவள்ளூர் நாடாளுமன்ற
தொகுதிக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஜெயக்குமாரை மாற்றக் கோரியும், எஸ்.சி, எஸ்.டி பிரிவிற்கு  இருபது சதவீத இட ஒதுக்கீட்டின் படி செல்வபெருந்தகைக்கு ஒரு தொகுதி ஒதுக்க கோரியும் இன்று சத்தியமூர்த்தி பவனில் எஸ்.சி துறையினர் கண்டன ஆர்பாட்டம் நடத்தினர். தாஸ்பாண்டியன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர்கள் ஜார்ஜ், புத்த நேசன், சாமுவேல், சௌந்தர், அய்யப்பன், கிஷோர், வேளச்சேரி செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். போராட்டத்தின் போது நுங்கை சீனு என்பவர் திடீரென மண்ணெண்ணையை தன் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
அவரை கட்சியினர் தடுத்து தண்ணீர் ஊற்றினர். அப்போது பேசிய தாஸ் பாண்டியன் கட்சியில் வேலை பார்க்காத நபருக்கு சீட்டு தருகிறார்கள்
கட்சிக்காக உழைப்பவர்களை புறக்கணிக்கிறார்கள்.எஸ்சி எஸ்டி பிரிவினரின் உரிமைகள் பறிக்கப்படுகிறது.கட்சியில் எஸ்சி எஸ்டி பிரிவினருக்கு துரோகம் இழைக்கப்படுகிறது. எங்களுக்கு மதிப்பளிக்க  மறுக்கிறார்கள். ஆகவே திருவள்ளூர்  தொகுதியில்  அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர் ஜெயக்குமாரை உடனே மாற்றி விட்டு மாற்ற வேண்டும். எஸ்சி எஸ்டி பிரிவினருக்கு 20 சதவீத இட ஒதுக்கீட்டின் படி இரண்டு நபர்களுக்கு சீட்டு தர வேண்டும்  இல்லையென்றால்  எங்கள் போராட்டம் தொடரும் என்று கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக