வெள்ளி, 1 மார்ச், 2019

மோடிக்கு பயந்து இம்ரான் கான் அபிநந்தனை விடுவித்துவிட்டார்.... ???

Adv Manoj Liyonzon : ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு தீவிரவாதிகள் தாக்குதல்
நடத்தியது குற்றம், கண்டிக்கத்தக்கது, தண்டனைக்குரியது. உரிய அரசாங்கப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியது அவசியம்.
அதற்காக, உரிய அனுமதி இன்றி இந்தியா தனது விமானப்படை மூலம் பாகிஸ்தான் பகுதிக்குள் இரண்டு முறை அத்து மீறி எல்லை தாண்டி ஊடுருவினார்கள் என்று பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது
அதில் முதல் முறை நுழைந்தபோது பாகிஸ்தான் படை இந்திய போர் விமானத்தை வழிமறித்து திருப்பி அனுப்புகையில் ஆளில்லா பாகிஸ்தான் பகுதிக்குள் குண்டு போட்டுச் சென்றது இந்திய போர் விமானம். அதில் யாரும் பாதிக்கப்படவில்லை என்றாலும், எல்லை ஒப்பந்த உடன்படிக்கையின்படி குண்டு போட்டது குற்றமே
இதை சமாளிக்கத்தான், சைனாவில் நடைபெற்ற உலக வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மாநாட்டில் கலந்துகொண்ட இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தவே இல்லை, மாறாக தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக சந்தேகிக்கப்பட்ட பகுதிக்குள் தான் தாக்குதல் நடத்தப்பட்டது என்று சமாளித்தார்.
மேலும் இரண்டாவது முறை நுழைந்தபோது, தங்கள் பகுதிக்குள் வைத்து இந்திய போர் விமானங்களை பாகிஸ்தான் படை சுட்டு வீழ்த்தியது. விமானி அபிநந்தனை காவலில் எடுத்தது.

அதன்பிறகு அணு ஆயுதங்கள் வைத்திருக்கும் இரண்டு நாடுகள் போரில் ஈடுபடுவது தத்தமது நாட்டை சீர்குலைக்கும் செயல். ஆகவே பாகிஸ்தான் போரை விரும்பவில்லை, முன்னேற்றத்தை தான் விரும்புகிறது. எனவே பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று மிகுந்த பொறுப்புணர்வோடு இந்தியாவுக்கு அழைப்பு விடுத்தார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்.
ஆனால் பொறுப்பற்ற முறையில் ஊர் சுற்றித்திரியும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இதற்கு உரிய பதிலளிக்கவில்லை. குறைந்தபட்சம் இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்தியதற்காகவாவது பொங்குவார் என்று பார்த்தால் திருடனுக்கு தேள் கொட்டியது போல் கமுக்கமாக இருக்கிறார். ஆனால் போர் போர் என்று பீலா விட்டு கொண்டும், இதை வைத்து உள்நாட்டுக்குள் நாடாளுமன்ற ஓட்டு வேட்டை நடத்திக் கொண்டும், வழக்கம்போல ஊர் சுற்றிக் கொண்டும் இருக்கிறார்.
இதை கிரகித்துக் கொண்ட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இந்த அசம்பாவிதங்களை எதிர்வரும் இந்திய நாடாளுமன்ற தேர்தலுக்காக மோடி பயன்படுத்துகிறார் என்று ஒரு பேட்டியில் குறிப்பிட்டுவிட்டு, சிக்கிய இந்திய போர் விமானி அபிநந்தனை சமாதான நடவடிக்கையாக விடுவிக்கவும் செய்திருக்கிறார்.
உண்மையில் இந்தியா வளரும் நாடு தான், வளர்ந்த நாடு அல்ல.
எனவே போர் மூண்டால் இந்திய பொருளாதாரம் பெரிய அளவில் சீர்குலையும், மக்கள் கடும் அவதிக்கு உள்ளாவார்கள், முதலீடுகள் நட்டமடையும், பணமதிப்பு வீழ்ச்சியடையும், திரும்ப வளர மிக நீண்ட காலம் பிடிக்கும் என்பதால், நரேந்திர மோடியை நம்பி பெருமளவில் முதலீடு செய்திருக்கும் பெருமுதலாளிகள், போர் நடப்பதை அனுமதிக்க மாட்டார்கள், புதிதாக முளைத்திருக்கும் ராணுவ தளவாட விநியோக ஒப்பந்ததாரர் அனில் அம்பானி ஒருவரை தவிர. போரும் நடக்காது. ஆனால் சிறுசிறு தாக்குதல்கள் நடக்கலாம் தேர்தல் அரசியலுக்காக
உள்ளநாட்டுக்குள் அடிச்சா யார்னு கேக்க ஆளில்லாத அப்பாவிகளை வேண்டுமானால் மோடி&கோ தாக்குமே தவிர, எதார்த்தத்தில் இன்னொரு நாட்டுடன் ஒரு போரை நடத்துமளவிற்கு மோடி&கோவுக்கு துணிவு இருக்காது
ஆனால் இந்த உண்மை எதுவுமே புரியாமல், மோடிக்கு பயந்து இம்ரான் கான் அபிநந்தனை விடுவித்துவிட்டார் என்று சில்லறைத்தனமாக உளறிக் கொட்டிக் கொண்டிருக்கிறார்கள்
இந்த லூசுங்களுக்கு எப்படி புரியவைப்பது போர் எல்லாம் நடக்காது என்று

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக