சனி, 23 மார்ச், 2019

சுந்தர தெலுங்காகிய நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள்

Anirutha Brammarayan :
சீமானின் தெலுங்கு வாரிசு அரசியல்
எந்த கட்சி வேட்பாளர் பட்டியல் வெளியிட்டாலும், உடனடியாக லேப் டெஸ்ட் செய்து யார் யாருக்கு வாரிசு, தெலுங்கு யார் எனக் கூறுவதில் நாம் தமிழர் சீமான் கட்சியினர் கைதேர்ந்தவர்கள்.
சரி இந்த ஒருமுறை நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ஒருவருக்கு லேப் டெஸ்ட் செய்து நம்ம அறிவிப்போம் நாங்க ஒரு டீம் கிளம்பினோம். அப்ப தான் விருதுநகர் தொகுதி நாம் தமிழர் வேட்பாளர் அருள்மொழித்தேவன் என்ற தகவல் வந்தது. அருமையான பெயர். இவருக்கே லேப் டெஸ்ட் ஆரம்பிப்போம் என இறங்கினோம்.
முன்னாள் சபாநாயகர் காளிமுத்து எம்எல்ஏ ஆவதற்கு முன் தமிழாசிரியராக வேலைபார்த்தார். அப்போது அவருக்கு திருமணம் ஆகி குழந்தைகள் இருந்தனர். அவரது மனைவி பெயர் நிர்மலா. தீவிர கிறித்துவரான அவர் காளிமுத்துவின் சாதியான தேவர் சாதியைச் சேர்ந்தவர். அவரது குழந்தைகளுக்கு காளிமுத்துவின் திராவிடத் தமிழும் மனைவியின் கிறித்துவப் பெயர்களும் சேர்ந்து வைக்கப்பட்டன. நிர்மலா-காளிமுத்து தம்பதியினருக்கு ஐந்து குழந்தைகள் மருத்துவர் புனிதா ஆனந்த், டேவிட் அண்ணாதுரை, செந்தமிழ் சாம்ராஜ், தென்றல் வேதமணி, ரோசலின் கிரேஸ்.
இதில் டேவிட் அண்ணாதுரை என்பவர் தான் மதுரையில் டிடிவி தினகரன் கட்சி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இப்போது ஒரு பிளாஷ்பேக். காளிமுத்து தமிழாசிரியராக இருந்த போது மதுரையில் உள்ள அம்பாசிடர் ஓட்டலில் மாலை நேரத்தில் கட்சிப் பணிகளை கவனிப்பது வழக்கம். அப்போது அவருக்கு இரண்டாவது காதல் உதயமாகிறது. அந்தப் பெண்ணின் பெயர் மனோகரி. அவர் தெலுங்கு பேசும் விஸ்வகர்மா இனத்தைச் சேர்ந்தவர். அவரது சாதியினர் தமிழகத்தில் குறைவு என்பதால் தெலுங்கு பேசும் நாயுடு சாதியினரோடு திருமண உறவு வைத்து ஒன்றோடு ஒன்றாக கலந்துவிட்டனர். அப்படி இல்லை, கம்மாள நாயுடுவின் ஒரு பிரிவுதான் தெலுங்கு விஸ்வகர்மா என்றும் கூறப்படுகிறது. இப்போதைய மாட்ரிமோனி திருமண தகவல் மையங்களில் கம்மாள நாயுடு - தெலுங்கு விஸ்வகர்மா என்று தான் பதியப்படுகிறது. (ச்சை இந்த டம்ளர் பாய்ஸ்க்காக கண்ட கண்ட சாதி ஆராய்ச்சி எல்லாம் பண்ண வேண்டி இருக்கு)
அந்த கம்மாள தெலுங்கு விஸ்வகர்மா இனத்தைச் சேர்ந்த மனோகரி என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்கிறார் காளிமுத்து. இரண்டாவது மனைவியின் மூலமாக நான்கு குழந்தைகள். தெலுங்கு தாயாக இருந்தாலும் அனைவருக்கும் தூய இந்து தமிழ்ப்பெயர்கள் வைக்கிறார்கள்.
1. மணிகண்ட பாண்டியன் 2. அமுதா பிரசன்னா 3. அருள்மொழித்தேவன் 4. கயல்விழி.
இதில் கடைசியாக வரும் கயல்விழி என்பவர் தான் சீமானின் மனைவி, நாம் தமிழர் கட்சியின் ஒரிஜினல் தலைமை ஒருங்கிணைப்பாளர்.
முதல் மனைவியின் குடும்பத்தாருக்கும் இரண்டாம் மனைவியின் குடும்பத்தாருக்கும் இடையில் பெரிய அக்னி நட்சத்திர படமே ஓடியிருக்கிறது. (தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில்) இதை நிரூபிக்க ஒரு சம்பவம் சொன்னால் அனைவருக்கும் புரியும்.
இரண்டாவது மனைவியின் மகளான அமுதா பிரசன்னா (கயல்விழியின் சகோதரி) என்பவருக்கு 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்ய காளிமுத்து முடிவெடுக்கிறார். அப்போது அதிமுக ஆட்சியை இழந்த நேரம். காளிமுத்துவும் பணப் பிரச்சினைகளில் சிக்கியுள்ளார். எனவே உறவினர் ஒருவரிடம் 25 இலட்சம் திருமணத்திற்காக கடனாக வாங்குகிறார். அதன் பிறகு சில காலத்திலேயே இறந்துவிடுகிறார். யாரும் பணத்தை திருப்பித் தராததால் கடன் கொடுத்த உறவினர் வழக்குப் போடுகிறார். முதல்மனைவியின் குழந்தைகளும் இரண்டாவது மனைவியின் குழந்தைகளும் சேர்ந்து அந்த கடனை அடைக்க வேண்டும் என. உடனடியாக டேவிட் அண்ணாதுரை உள்ளிட்ட முதல் மனைவியின் குழந்தைகள் தங்கள் பங்காக இருபது லட்சம் ரூபாயை கட்டி விடுகின்றனர். மீதியை அவர்களிடம் வாங்கிக் கொள்ளுங்கள் என்று. இப்ப தான் கதையில் ஒரு ட்விஸ்ட். "நாங்க சட்டப்பூர்வ வாரிசே இல்லை. இரண்டாம் மனைவி குழந்தைகள் தான். அவர் வாங்கின கடனுக்கு நாங்கள் எப்படி பொறுப்பாவோம்னு" பதில் அனுப்புறாங்க கயல்விழி உள்ளிட்ட இரண்டாம் மனைவியின் குழந்தைகள். அதாவது ஐந்து லட்சம் ரூபாய்க்காக இந்த பதில்.
அப்படி பதில் அனுப்பியவர்களில் ஒருவரான அருள்மொழித்தேவன் என்பவர் தான் நாம் தமிழர் கட்சியின் விருதுநகர் வேட்பாளர். ஊரையே தெலுங்கு தெலுங்கு என முத்திரை குத்திய நாம் தமிழர் கட்சியினர், தங்கள் தெலுங்கு அண்ணியின் தம்பி, சீமான் மைத்துனர், நாம் தமிழரின் இளைய சுதீஷ் அருள்மொழித்தேவனுக்காக வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்யும் அரிய காட்சியை காண ஆவலாக இருக்கிறோம்.
இதில் மைத்துனர் என்றும் பாராமல் டேவிட் அண்ணாதுரையை எதிர்த்து சீமான் வேட்பாளர் நிறுத்துகிறாராம். நிறுத்தலனா வீட்ல சோறு கிடைக்காது. அண்ணியாருக்கு திமுக அதிமுகவைவிட பெரிய எதிரி மூத்த தாரத்து பங்காளிகள் தானாம். மதுரையில் உள்ள காளிமுத்துவின் பெட்ரோல் பங்க் யாருக்கு என்பதில் பெரிய பஞ்சாயத்தே நடந்ததாம்.
இது தான் சீமான் வாரிசு அரசியலை எதிர்க்கும் இலட்சணம். சீமான் தான் மைத்துனர் அருள்மொழிதேவனுக்கு முன்னின்று திருமணம் செய்து வைத்தது. இப்போது தெலுங்கு ஓட்டு அதிகம் உள்ள விருதுநகரில் வேட்பாளராக களமிறக்கி உள்ளார்.
சீமான் வேட்பாளாராக போட்டியிடும் இடங்களில் டம்மி வேட்பாளராக போட்டியிட யாருக்கும் வாய்ப்பு வழங்கப்படமாட்டது. அங்கு அண்ணியார் கயல்விழி மட்டுமே இரண்டாவது வேட்பாளராக போட்டியிடுவார். காளிமுத்து பெண்ணிற்கு கட்சிக்குள்ளேயே வரும் எடப்பாடிகளைப் பற்றி தெரியாதா? மூனு பிளாக் வந்த மனுசன் சீமான். எதையும் உறுதியாக சொல்லமுடியாது. எவனாவது கட்சியை கொத்திக்கிட்டு போய்ட்டா?
தமிழன் என்று கண்டுபிடிக்க சாதியின் பெயரை பேருக்கு பின்னால் இடவேண்டும் என தமிழ்தேசிய லூசுகள் பேசுகின்றன. இவர்கள் ஏன் தங்கள் விருதுநகர் வேட்பாளர் அருள்மொழித்தேவன் தெலுங்கு விஸ்வகர்மா வில் இருந்து ஆரம்பிக்கக்கூடாது?
திமுக அதிமுக வேட்பாளர் பட்டியல் வந்தவுடன் இத்தனை தெலுங்கு என உடனடியாக லேப் ரிசல்ட் ரிலீஸ் செய்யும் டம்ளர் பாய்ஸ் விருதுநகரில் வேட்பு மனுத் தாக்கல் முடிந்த பின்னும் அமைதியாக இருப்பதன் காரணம் என்ன?
அதிகமாக உள்ள தெலுங்கு ஓட்டுகளை குறிவைத்து தேமுதிக விருதுநகர் தொகுதியை கேட்டு வாங்கி தெலுங்கு செட்டியார் வேட்பாளரை நிறுத்திய நிலையில், நாம் தமிழரின் சார்பிலும் தெலுங்கு வேட்பாளர் விருதுநகரில் நிறுத்தப்படுவது எதேச்சையாக நடந்ததா?
மீதமுள்ள காளிமுத்துவின் இரண்டாம்தார வாரிசுகளுக்கு அடுத்த தேர்தலில் சீமான் வாய்ப்பளிப்பாரா?
கடைசியாக ஒரே ஒரு கேள்வி சீமானின் மகன் தமிழனா தெலுங்கனா? லேப் டெஸ்ட் வந்துவிட்டதா?
(திருச்சி துரைமுருகன் இனிமே கம்மாள கொம்மாலன்னு வாயை தொறப்பாரு??? மண்டியிடாத வீரம் அண்ணியாருக்கு தான்டா ங்கொய்யால)
படம்: விருதுநகர் வேட்பாளர் அருள்மொழித்தேவன் திருமணத்தில் அண்ணியார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக