சனி, 23 மார்ச், 2019

கமிலா நாசர் .. குடும்பத்தை கைவிட்ட கமல் கட்சி தென்சென்னை வேட்பாளர் .. நடிகர் நாசரின் குடும்பம் வறுமையில்

கமல் கமீலா நாசர்
nassar kameelatoptamilnews.com/ :சொந்தக் குடும்பத்தைத் தவிக்க விட்ட கமீலா நாசர் - இது உங்க கண்ணுக்கு தெரியலையா கமல் கமல் கமீலா நாசர் வீட்டிற்கு வெளியே புரட்சி, மாற்றம் என்று சமூகத்திற்காகவே வாழ்வதாக சொல்லிக் கொள்ளும் பெரும்பாலானோரைப் பற்றிய உண்மைகள் அவர்கள் வீட்டில் விசாரித்தால் தான் தெரிய வரும். பொதுவாக ஆண்களில் பலர் இந்த வகையில் வருவார்கள். பொதுவாழ்வில் நல்லவர்கள் போல் காட்டிக் கொண்டு தங்கள் அதிகாரத்தை முழுமையாக வீட்டில் செலுத்துவார்கள் என கேள்வி பட்டிருப்போம். மத்திய சென்னை வேட்பாளர் கமீலா நாசர் :
ஆனால், நடிகர் கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மேல்மட்டக்குழு உறுப்பினரும், மத்திய சென்னை தொகுதி வேட்பாளருமான நடிகர் நாசரின் மனைவி கமீலா நாசர் மேல் இத்தகைய குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. அதுவும் அவர் குடும்ப உறுப்பினர்களால்.
நடிகர் நாசர் தமிழில் முன்னணி நடிகராக வலம் வருபவர். வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களுக்கு கச்சிதமாகப் பொருந்தக் கூடிய நடிகர். கமலஹாசனுக்கு நல்ல நண்பரும் கூட. இதனாலேயே மக்கள் நீதி மய்யம் தொடங்கப்பட்டதில் இருந்தே நாசர் மனைவி கமீலா நாசரும் கமல்ஹாசனுடன் கட்சி பணிகளில் ஈடுபட்டிருக்கிறார்.

கட்சி தொடங்கப்பட்ட போது அறிவிக்கப்பட்ட மேல்மட்டக் குழுவில் இருந்த கமீலா நாசருக்கு மக்களவைத் தேர்தலில் மத்திய சென்னை தொகுதியில் வேட்பாளாராகும் வாய்ப்பை வழங்கினார் கமல்ஹாசன். இதனால் இப்போது கமீலா நாசரின் இன்னொரு முகம் வெளி வந்துள்ளது.
nasar brother
இதை கவனிக்கவில்லையா கமல் ?
நடிகர் நாசரின் தம்பி ஜவகர் மெகபூப் பாஷா  இன்று சமூக வலைத்தளங்களில் சில தகவல்களைப் பகிந்திருக்கிறார். நாசரின் பெற்றோர் மற்றும் மனநிலை பாதிக்கப்பட்ட கடைசி தம்பி ஆகியோரின் புகைப்படங்களை பகிர்ந்துள்ள ஜவகர் மெகபூப் பாஷா ,செங்கல்பட்டில் வசிக்கும் இவர்கள் தங்களின் அடிப்படை தேவைக்கும், அன்றாட சாப்பாட்டுக்கும் சிரமப்படும் வறுமை நிலையில் உள்ளனர். கழிப்பறை வசதி கூட இல்லாத வீட்டில் தான் வெகுகாலமாக வசித்து வந்திருக்கின்றனர். சமீபமாகத் தான் கழிவறை வசதி செய்யப்பட்டது>நடிகர் நாசரின் பெற்றோர் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட சகோதரர் இவர்களுக்கென்று நடிகர் நாசர் இதுவரை எந்த உதவியும் செய்ததில்லை. வந்து பார்ப்பது கூட இல்லை. இதற்கு காரணம் கமீலா நாசர் தான். சொந்த வீட்டை பார்த்துக் கொள்ளாத இவர்களா நாட்டைக் காப்பாற்றப் போகிறார்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார். நாசர் அவர் குடும்ப உறுப்பினர்களைச் சென்று பார்த்து 27 வருடங்கள் ஆகிறதாம். இது பற்றி தென்னிந்திய நடிகர் சங்கத்தில் புகார் அளித்தும் அவர்கள் கண்டு கொள்ளவில்லை என்கிறார் ஹோட்டலில் வேலை பார்த்து குடும்பத்தை பார்த்துக் கொள்ளும் நாசரின் இரண்டாவது சகோதரர்.
குற்றச்சாட்டுகள் இல்லாத, கை சுத்தமான, நேர்மையான, சமூகப் பொறுப்புள்ள வேட்பாளர்களைத் தேடி தேடி தேர்ந்தெடுத்த மக்கள் நீதி மய்யத் தலைவர் கமலஹாசன் இதை கவனிக்க மறந்துவிட்டாரோ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக