ஞாயிறு, 10 மார்ச், 2019

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் இலவச தொலைபேசி வசதி தொடக்கம்

tamil.thehindu.com : சென்னையில் சுரங்கப்பாதையில் அமைக்கப்பட்டுள்ள 19 மெட்ரோ ரயில் நிலையங்களிலும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இலவச தொலைபேசி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் 2 வழித்தடங்களில் மொத்தம் 45 கிமீ தூரத்துக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த புதிய சேவை மக்களிடம் வரவேற்பு பெற்றுள்ள நிலையில், சுரங்கப்பாதையில் செல்போன் நெட்வொர்க் பிரச்சினை ஏற்படுவதாக தொடர்ந்து புகார் அளித்து வருகின்றனர்.

இதைப் படிப்படியாகத் தீர்க்கும் வகையில் நடவடிக்கை எடுத்து வருகிறது. இருப்பினும், தற்போது உடனடி சேவையாக சுரங்கப்பாதை மெட்ரோ ரயில் நிலையங்களில் இலவச தொலைபேசி வசதி தொடங்கப்பட்டுள்ளது.
19 மெட்ரோ ரயில் நிலையங்களில்இதுதொடர்பாக மெட்ரோ ரயில் நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
மெட்ரோ ரயில் பயணிகள்பயன்பெறும் வகையில் சுரங்கப் பாதையில் அமைக்கப்பட்டுள்ள 19 மெட்ரோ ரயில் நிலையங்களில் இலவச தொலைபேசி வசதி தொடங்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர் சேவை மையம் பகுதியில் சென்று பயணிகள் இந்த வசதியைப் பெறலாம்.
அவசர கால சேவைமெட்ரோ ரயில் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள், பொதுமக்கள் அவசர கால சேவை பெறுவதற்கு ஏற்கெனவே அவசர கால தொலைபேசி மையமும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது.
திருமங்கலம் - எழும்பூர், சைதாப்பேட்டை - டிஎம்எஸ் தடத்தில் 2 தொலைதொடர்பு நிறுவனங்களின் சேவை கிடைக்கிறது. இன்னும் ஒரு மாதத்தில் மற்ற நிறுவனங்களின் சேவை கிடைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதேபோல், சென்ட்ரல் - வண்ணாரப்பேட்டை இடையே செல்போன் சேவை பெறு வதற்கான கட்டமைப்புப் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. எனவே, அடுத்த 2 அல்லது 3 மாதங்களில் பணிகள் முடிந்து மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக