செவ்வாய், 19 மார்ச், 2019

நடிகை பூஜா காந்தி அசோக் ஹோட்டலில் பில் கட்டாமல் ஓட்டம்?

Siva பெங்களூர்: நடிகை பூஜா காந்தி சொகுசு ஹோட்டலில் தங்கியிருந்துவிட்டு பில் கட்டாமல் நைசாக எஸ்கேப் ஆகியுள்ளார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாள படங்களில் நடித்து வருபவர் பூஜா காந்தி. கரணின் கொக்கி படம் மூலம் கோலிவுட் வந்தவர் சரத்குமாரின் வைத்தீஸ்வரன் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.
அவர் பெங்களூரில் தங்கி கன்னட படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். பூஜா காந்தி பெங்களூரில் உள்ள ஹோட்டல் அசோக்கில் தங்கியிருந்திருக்கிறார்.
ஆனால் பில் தொகையை செலுத்தாமல் நைசாக அங்கிருந்து எஸ்கேப் ஆகிவிட்டார். இதையடுத்து ஹோட்டல் நிர்வாகம் காவல் நிலையத்தில் பூஜா மீது புகார் அளித்தது. பூஜா காந்தி ரூ. 4.5 லட்சம் பில் கட்ட வேண்டி இருந்த நிலையில் எஸ்கேப் ஆகியிருக்கிறார். இதையடுத்து போலீசார் அழைத்து விசாரணை நடத்திய பிறகு முதல் கட்டமாக ரூ. 2 லட்சம் அளித்துள்ளார்.

மீதித் தொகையை செலுத்த கால அவகாசம் கேட்டுள்ளார். கன்னட திரையுலகில் பிரபலமாக உள்ள பூஜா காந்தி ஹோட்டல் பில் கட்டாமல் ஓட்டம் பிடித்த சம்பவம் பிரபலங்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. பூஜாவை பிடிக்காதவர்களோ அவர் செய்த காரியத்தை பார்த்து சிரிக்கிறார்கள்.

 பூஜா காந்தியின் மார்க்கெட் நிலவரம் சரியில்லை. அரசியல் பக்கம் சென்று பார்த்தும் பலன் இல்லை. அவருக்கு தற்போது பண பிரச்சனை இருப்பதாக கூறப்படுகிறது. பண பிரச்சனை இருப்பவர் எதற்காக சொகுசு ஹோட்டலில் தங்க வேண்டும் என்ற கேள்வி எழுந்துள்ளது.tamil.filmibeat.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக