செவ்வாய், 19 மார்ச், 2019

சீமான் மிரட்டல் : டே அவளுக்கு சீட் கொடுக்க சொல்ல நீ யாரடா . போடா வெளியே .. வீடியோ

  வெப்துனியா :சீமான் தனது தொண்டர் ஒருவருடன் வேட்பாளர் தேர்வு தொடர்பாகக் கோபமாகப் பேசிய ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
 நேற்று முதல் சமூகவலைதளங்களில் சீமானும் அவருடையக் கட்சியைச் சேர்ந்த தொண்டர் ஒருவரும் காரசாரமாகப் பேசிக்கொள்ளும் ஆடியோ ஒன்று வேகமாகப் பரவி வருகிறது. அதில் களத்தில் வேலைப் பார்க்கும் நபருக்கு சீட் கொடுக்க சொல்லி அந்த நபர் கேட்க அதற்குக் கோபமாக சீமான் பதிலளிக்கும் படி அந்த ஆடியோ உள்ளதால் அதை சமூக வலைதளங்களில் பரப்பி சீமானை விமர்சனம் செய்து வருகின்றனர்.
 அந்த ஆடியோவில் ’ ஏய் இந்திராங்கிற பொண்ணுக்கு சீட் கேட்டியாமே? எங்களுக்குத் தெரியாதா யார நிறுத்தனும்னு, நாங்கல்லாம் முட்டா பயலுக?
நீங்க களத்துல இருக்குறவங்கள கண்டுபுடிச்சி எங்களுக்கு காட்டிருவீங்க… என்ன நடக்குதுனு, எனக்கு தெரியாதது உனக்குத் தெரியுதா?.. நான் நிறுத்துற ஆளுக்கு வேலை செய்ய முடியும்னா செய், இல்லனா வெளியேறி போய்கிட்டே இரு’ எனக் கோபமாகப் பேசுகிறார்.

களத்தில் வேலை செய்பவர்கள் யாருக்கு வேண்டுமானாலும் சீட் கொடுங்கள் நாங்கள் வேலை செய்கிறோம் என அந்த நபர் மீண்டும் மீண்டும் சொல்ல சீமானோ அதைக் காதில் வாங்காமல் போனைக் கட் செய்தார். தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளில் 20 பெண் வேட்பாளர்கள், 20 ஆண் வேட்பாளர்களை நிறுத்துவோம் என அறிவித்துள்ளது நாம் தமிழர் கட்சி. இந்நிலையில் இந்த ஆடியோ வேகமாகப் பரவுவதால் சீமான் தொண்டர் ஒருவரிடம் சினேகமாகப் பேசும் ஆடியோ ஒன்றை இப்போது வெளியிட்டு உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக