திங்கள், 4 மார்ச், 2019

பாகிஸ்தான் விமானியை இந்திய விமானி என நினைத்து அடித்துக்கொன்ற மக்கள்

தினமலர் :இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பாராசூட் மூலம் குதித்த அந்நாட்டு பைலட்டை இந்திய விமானி என நினைத்து அந்நாட்டு மக்களே அடித்துக்
கொன்றனர்.
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக பிப்.26-ந்தேதி இந்திய விமானங்கள் பாகிஸ்தானுக்குள் நுழைந்து பயங்கரவாதிகள் முகாம் மீது தாக்குதல் நடத்தியது. மறு நாள் பாகிஸ்தான் விமானங்கள் இந்திய பகுதிக்குள் தாக்குதல் நடத்துவதற்கு வந்தன அதை இந்திய போர் விமானங்கள் அவற்றை விரட்டிச் சென்று தாக்கின. அதில் மிக்-21 என்ற விமானத்தை அபிநந்தன் ஓட்டிச் சென்றார். அவர் பாகிஸ்தானின் எப்-16 ரக விமானத்தை விரட்டிச் சென்று ஏவுகணையால் சுட்டு வீழ்த்தினார்.
அடுத்த வினாடி அபிநந்தன் ஓட்டிச் சென்ற விமானத்தின் மீது பாகிஸ்தான்
ஏவுகணை வீசி தாக்கியது. அதில் அபிநந்தனின் விமானமும் வெடித்து சிதறி கீழே விழுந்தது. இதில் அபிநந்தன் பாராசூட் மூலம் கீழே குதித்தார். பாராசூட் பாக்., பகுதிக்குள் விழுந்தது. அதேபோல அபிநந்தனால் வீழ்த்தப்பட்ட பாகிஸ்தான் விமானத்தில் இருந்தும் விமானி பாராசூட்டில் பாக்.கினுள் குதித்தார்.அபிநந்தனை கிராம மக்கள் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் ராணுவம் வந்து அவரை மீட்டது.


அதே நேரத்தில் பாகிஸ்தான் பைலட் விழுந்த இடத்தையும் கிராம மக்கள் சுற்றி வளைத்தனர். அவரை இந்திய விமானி என கருதி அவரை தாக்கினார்கள். இதில் அவர் படுகாயம் அடைந்தார். பின்னர் அந்த விமானி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அந்த பைலட்டின் பெயர் விங் கமாண்டர் 'ஷாகஸ் உத் தின்' . அபிநந்தன் போலவே ஷாகஸ் உத் தினும் விமானப்படை அதிகாரி ஒருவரின் மகன், என லண்டனில் வசிக்கும் பாகிஸ்தானை சேர்ந்த வக்கீல் காலித்உமர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக