திங்கள், 25 மார்ச், 2019

ஐ சி யூவில் நோயாளிமீது பாலியல் வன்முறை .. உத்தர பிரதேசம்

Meerut, Uttar Pradesh: A woman patient, with breathing problem, was allegedly gang-raped by a group of hospital staff in Uttar Pradesh's Meerut on Sunday. Four men and a woman have been detained and being probed for their role in the case, said the police. "The woman was admitted to the hospital with breathing problem. She has alleged that she was gang-raped by hospital staff on Sunday," senior officer, Harimohan Singh told news agency ANI.
வீரகேசரி :மூச்சுத் திணறலுக்காக வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பெண் நோயாளியை வைத்தியசாலை ஊழியர்களே இணைந்து கூட்டு பலாத்காரம் செய்த கொடுமையான சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவத்துடன் தொடர்புடைய வைத்தியசாலை ஊழியர்கள் ஐந்து பேரை உத்தரப் பிரதேச பொலிஸார் கைதுசெய்துள்ளனர். சம்பவம் தொடர்பில் உத்தரப் பிரதேச பொலிஸார் தெரிவிக்கையில், ”மூச்சுப் பிரச்சினை சிகிச்சைக்காக தனியார் வைத்தியசாலை ஒன்றில் ஒரு பெண் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வைத்தியசாலையில் பணிபுரியும் ஊழியர்களின் கும்பல் ஒன்று அப்பெண் மீது பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக ஒரு பெண் மற்றும் நான்கு ஆண்களுமாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையில் வைத்தியசாலை ஊழியர்கள் இதன்போது சிசிடிவி கமெரா இயக்கத்தை நிறுத்திவிட்டடு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டமை தெரியவந்துள்ளது.

உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் இவர்கள் ஐந்து பேரின் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இக்குற்றச்செயலில் அவர்களுடைய பங்கு என்ன என்பது குறித்து மேலும் விசாரணை தொடர்ந்து நடைபெற்றுவருகிறது எனத் தெரிவித்தார்.

 பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் இதுகுறித்து கூறுகையில், ”மூச்சுப் பிரச்சினைக்காக வைத்தியசாலையில் என் மனைவி அவசர சிகிச்சைப் பிரிவில் (ஐசியூ) அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று அருகில் யாருமில்லாத நேரத்தில் வைத்தியசாலையின் ஊழியர்கள் சிலர் அவருக்கு மயக்க ஊசி போட்டுவிட்டு மூன்று பேர் கூட்டு பலாத்காரத்தில் ஈடுபட்டனர்.

இதில் பெண் ஊழியர் ஒருவர் உட்பட இன்னொருவரும் உடந்தையாக இருந்தார்” என்றார். வைத்தியசாலையில் வைத்திய ஊழியர்களே கூட்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக