திங்கள், 25 மார்ச், 2019

சுதர்சன நாச்சியப்பன் : கார்த்தி சிதம்பரம் வேட்பாளரா..ப.சி. குடும்பத்தின் மீது மக்களுக்கே வெறுப்பு.

யார் வேட்பாளர் .oneindia.com சென்னை: கார்த்தி சிதம்பரம் வேட்பாளர் என்பது பொதுமக்களுக்கே அதிர்ச்சி அளிக்கிறது என காங்கிரஸ் மூத்த தலைவர் சுதர்சன நாச்சியப்பன் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
தமிழகம் மற்றும் புதுவையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டிகிறது. இதில் தமிழகத்தில் 9 இடங்களும், புதுவையில் ஒரு இடமும் காங்கிரஸுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது.
அதில் சிவகங்கை தொகுதிக்கு மட்டும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. இத்தொகுதியில் கடந்த லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்ததால் இந்த முறை எப்படியும் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற ஆர்வத்தில் அங்கு போட்டியிட கார்த்தி சிதம்பரம் ஆர்வம் காட்டியதாக தெரிகிறது.

யாரை நிறுத்துவது

ஆனால் அதற்கு மற்ற நிர்வாகிகளிடம் இருந்து ஒருமித்த கருத்து ஏற்படவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து அந்த தொகுதியில் யாரை நிறுத்துவது என்பது குறித்து ஆலோசனை நடந்தது. கார்த்தி சிதம்பரம் இல்லாவிட்டால் சுதர்சன நாச்சியப்பன் ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

யார் வேட்பாளர்

இந்த நிலையில் நேற்று திடீரென வேட்பாளர் பட்டியல் வெளியானது. இதில் சிவகங்கையில் கார்த்தி சிதம்பரத்துக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு சுதர்சன நாச்சியப்பன் தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் சிவகங்கை காங்கிரஸ் வேட்பாளராக கார்த்தி சிதம்பரத்தை அறிவித்துள்ளது மக்களுக்கே அதிர்ச்சியாக உள்ளது.

மக்களுக்கு அதிர்ச்சி

வெறுப்பு

தொகுதிக்கு எதையும் செய்யாமல் வெளிநாடுகளில் சொத்துகளை சேர்த்துள்ளது ப.சிதம்பரத்தின் குடும்பம். இந்த குடும்பத்தை மக்கள் வெறுக்கிறார்கள் என சுதர்சன நாச்சியப்பன் கூறியுள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக