ஞாயிறு, 10 மார்ச், 2019

விஜயகாந்த் வேடிக்கை பார்த்தபடி குழந்தை போல .. தன்னை சுற்றி நடப்பது புரியாமல் ..வீடியோ


Raj Dev : செய்தியாளர் சந்திப்பில் விஜயகாந்த் மிகவும் பாவமாக உட்கார்ந்து கொண்டிருந்தார்.
எல்லோரும் நேராக பார்த்துக் கொண்டிருக்க விஜயகாந்த் மட்டும் வேறு ஏதோ ஒன்றை வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருந்தார்.
தன்னை சுற்றி போட்ட கையை பிரேமலதா எடுக்க சொன்னார். ஒரு முறை எழுந்து விட்டு உட்காரும் போது பிரேமலதாவின் கரங்களை இறுகப் பற்றியபடி அமர்ந்தார். பிரேமலதா அதை துளியும் விரும்பவில்லை.
பேட்டி முடித்து போகும் போது விஜயகாந்தை கண்டுகொள்ளாமல் பிரேமலதா தனியாக எழுந்து சென்றார்.
விஜயகாந்தை கடந்து ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். ஆகியோர் சென்றனர். முதலில் விஜயகாந்தை அழைத்து செல்ல வேண்டும் என்ற எண்ணமும், பொறுப்பும் அங்கு யாரிடமும் இருக்கவில்லை. 
விஜயகாந்தால் எதுவும் பேசவோ, புரிந்து கொள்ளவோ கூட முடியாத நிலை அப்பட்டமாக தெரிந்தது. விஜயகாந்த் ஒரு குழந்தையை போன்று பரமாரிக்கப்பட வேண்டியவர். ஷேக்ஸ்பியரின் வார்த்தைகளில் அவர் இரண்டாம் குழந்தைமையை (Second Childishness) எட்டி உள்ளார். கலைஞர் மட்டும் முதிய வயதில் பணியாற்றவில்லையா என்று கேட்கலாம். கலைஞரின் மனோ சக்தி திறம்பட இருந்தவரை மட்டுமே அவரிடமிருந்து அறிக்கைகள் வந்தன. 

முதுமையும், உடல் நலிவும் அவரை கடுமையாக பாதித்த போதும் அவருடைய மனத்திறன் மட்டுமே அவரை காப்பாற்றி வந்தது. ஸ்டீஃபன் ஹாக்கிங்கை இயக்கி வந்ததும் அந்த மனத்திறன் தான். விஜயகாந்த் தனது மன ஆதாரத்தை இழந்து விட்டுள்ளார். அவரை முன்வைத்து பிரேமலதா - சுதீஷ் கும்பல் ஆடுவது அப்பட்டமான உடலியல் அத்துமீறல்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக