செவ்வாய், 26 மார்ச், 2019

பிஹெச் டி தலைப்புக்கள் இனி அரசாங்கம் தீர்மானிக்குமாம் .. இந்துத்வா அறிவுகொழுந்துகள் ...

ஆர் எஸ் எஸ் கல்வியாளர்கள்
- Swathi K : ஆராய்ச்சி படிப்புக்கான (Phd) தலைப்புகள் இனி அரசாங்கம்
தீர்மானிக்கும் தலைப்புகளில் தான் இருக்கவேண்டுமாம்.. வழக்கம் போல அதை "தேசிய முன்னுரிமை" (National priority) என்ற வார்த்தையை சொல்லி மக்களை ஏமாற்றி இருக்கிறார்கள்..
மாணவர்கள் அரசு கொடுக்கும் அந்த தலைப்புகளிலிருந்து மட்டும்தான் தலைப்பைத் தேர்வு செய்து ஆராய்ச்சி செய்யவேண்டுமாம்..
ராமாயண, மஹாபாரத கால போர் விமானங்கள், பிள்ளையார் பிளாஸ்டிக் சர்ஜ்ரி, மோடி சாதனைகள், போட்டோஷாப்பில் எப்படி வளர்ச்சிகாட்டுவது, விளம்பரங்கள் மூலம் மக்களை எப்படி முட்டாள் ஆக்குவது இப்படி நிறைய தலைப்புகள் இருக்கலாம்..
நாடு முழுவதும் கல்வியாளர்கள் இதற்க்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.. அதைப்பற்றி மோடி என்னைக்கு கவலை பட்டுள்ளார்..
இன்னொரு முறை பிஜேபி ஆட்சிக்கு வந்தால்.. இவ்வளவு காலம் நாம் கஷ்டப்பட்டு வளர்த்த அறிவியல் சமூகம் அடித்துநொறுக்கப்படும்.. நம்மை முற்றிலும் பின்னோக்கிய சமூகமாக மாற்ற அனைத்து முயற்சியும் நடந்து வருகிறது..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக