செவ்வாய், 26 மார்ச், 2019

அந்த 200 ரூபாய் உபி .. கட்டுக்கதையை அவிழ்த்து விட்ட இந்தியன் எக்ஸ்பிரஸ் flashback

Shanmugam Subramani : 200 ரூபாய் உ.பி ஸ்... இந்த பேரு திமுக காரங்களுக்கு எப்டி வந்துதுணு தெரியுமா ?
ஆயிரக்கணக்கான திமுகவினர் இணையத்துல திமுக தொடர்பா எழுதினு இருந்தாங்க. எல்லாத்திக்கும் பதிலடி தந்துனு இருந்தாங்க.. எதிராளிங்களுக்கு வயிற்றெரிச்சல்..
2016 சட்டமன்ற தேர்தல் சமயத்துல தினமணி குழுமத்தை சேர்ந்த இன்டியன் எக்ஸ்பிரஸ் நிறுவனம் இரண்டு பேர் பேசிக்கிற மாதிரி ஒரு ஆடியோ வெளியிட்டாங்க.. அந்த ஆடியோவுல ஒரு முணையில் இருந்து பேசும் நபர் தன்னை திமுகவின் இன்டர்நெட் ஏஜென்ட் என கூறி கொண்டு மறுமுனையில் பேசும் நபரிடம் நீங்க திமுகவுக்காக இணையத்துல எழுதுங்க , ஒவ்வோரு பதிவுக்கும் 200 ரூபாய் தருவோம்ன்ற மாதிரி ஆங்கிலத்துல பேசுவாங்க.
இந்த ஆடியோவ நியூஸ் 7 போன்ற திமுக எதிர்ப்பு செய்தி நிறுவனங்கள் திமுகவில் இணையதள பதிவர்களுக்கு ஒரு பதிவுக்கு 200 ரூபாய் தருகிறார்கள் என பிரேக்கிங் நியூஸோட வெளியிட்டு பரபரப்பாக்குனாங்க..
யார் பேசுனாங்கனு போட்டோவோ , வீடியோவோ எதுவும் போடல.. வெறும் ஆடியோ தான்.. அது சாதாரண ரெண்டு பேர் பேசி திமுகவுக்கு எதிராக ரெக்கார்ட் செய்யப்பட்ட ஆடியோணு சின்ன பசங்களுக்கு கூட தெரியும்..
இதுல 1 % கூட உண்மையில்லனு தெரிஞ்சும் அத நியூஸ் சேனல்கள் , பத்திரிக்கைகள் , திமுக எதிர்ப்பு இணைய பதிவர்கள் எல்லாருமே இத வச்சி திமுகவுக்காக இணையத்துல யார் எழுதுனாலும் அவங்கள ஈசியா 200 ரூவா உ.பி ஸ் னு கிண்டல் பன்னி பொதுமக்கள் மத்தியில திமுகவுக்காக இணையத்துல எழுதுற எல்லாருமே 200 ரூபா காசு வாங்கினு தான் எழுதுறாங்கனு ஒரு பிம்பத்த கட்டமைச்சாங்க.. அத பலரையும் உண்மைனு நம்ப வச்சாங்க..

ஆனா உண்மையிலேயே திமுகவுல ஒத்த ரூவா குடும் தர மாட்டாங்கனு திமுக காரண விட மத்த கட்சிக்காரண் எல்லாருக்குமே நல்லாவே தெரியும்..

இப்டி தான் சர்க்காரியா கமிஷன் தொடங்கி 2 G யில் விநோத்ராய் சொன்ன ஒவ்வொரு விஷயத்திலயும் எவனாவது எதாவது சொன்ன ஒரு சின்ன விஷயத்தை வச்சி , பொய் குற்றச்சாட்டுங்கள வச்சி திமுக மிகப்பெரிய ஊழல் கட்சி , ஆசியாவுலயே மிகப்பெரிய பணக்காரர் கருணாநிதி ( கலைஞர் ) அப்டி , இப்டினு சுலபமா மக்கள் மனசுல திமுகவுக்கு எதிராக யபதிய வச்சிடுவாங்க அதிமுகவினரும் , ஆதிக்க சாதியினரும் , சங்கிகளும் , திமுகவுக்கு எதிரான மற்றவர்களும்..!

திமுக மேல இருக்க பெரிய , பெரிய குற்றச்சாட்டுகளுக்கும் , விமர்சனங்களுக்கும் காரணம் தேடி பார்த்தா அது இந்த மாதிரி கேவலமான ஒன்னா தான் இருக்கும்..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக