ஞாயிறு, 10 மார்ச், 2019

84 ஆயிரம் இந்தியர்களுக்கு வேலை பறிபோகும்... சிறப்பு அனுமதியை ரத்து செய்ய அமெரிக்கா முடிவு

அமெரிக்கா, இந்தியர்கள், வேலை, டிரம்ப், விசாதினமலர் : புதுடில்லி : அமெரிக்காவில், 'எச் - 4' விசா பெற்று, பணியாற்றி வருவோருக்கு வழங்கப்பட்டு வரும் சிறப்பு அனுமதியை ரத்து செய்ய, அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப் பரிந்துரை செய்துள்ளார். இதையடுத்து, அங்கு பணியாற்றும், 84 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு, வேலை பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பொறியியல் அல்லது அதற்கு மேற்பட்ட படிப்புகளை படித்தவர்களுக்கு, அமெரிக்காவில் பணியாற்ற, 'எச் - 1பி' என்ற விசா வழங்கப்பட்டு வருகிறது. தகவல் தொழில்நுட்ப துறையைச் சேர்ந்தவர்கள், பெரும்பாலும் இந்த விசா பெற்று, பணியாற்றி வருகின்றனர்.இந்த விசா பெற்றவர்கள், தங்கள் மனைவி அல்லது கணவனை, தங்களுடன் அமெரிக்கா அழைத்துச் செல்ல, எச் - 4 என்ற விசா வழங்கப்படுகிறது.இந்த விசா பெற்றவர்கள், தங்கள் கணவர் அல்லது மனைவியுடன், அமெரிக்காவில் வசிக்கலாம். ஆனால், அங்கு வேலை பார்க்கவோ, சொந்த தொழில்


செய்யவோ முடியாது.

பரிந்துரை

இந்நிலையில், அமெரிக்க அதிபராக ஒபாமா பதவி வகித்தபோது, 2015ல், இந்த, எச் - 4 விசா நடைமுறையில் சிலசலுகையை அறிவித்தார்.அதில், 'எச் - 4 விசா வைத்திருப்பவர்கள், இ.ஏ.டி., எனப்படும், சிறப்பு பணி அனுமதி ஆவணம் என்ற திட்டத்தின் கீழ், அமெரிக்காவில் பணியாற்ற அனுமதி வழங்கப்படும்' என, அறிவித்தார். இதன் வாயிலாக, எச் - 4 விசாவில் அமெரிக்கா சென்ற இந்தியர்கள் பலர், வேலைவாய்ப்பு பெற்றனர்.இந்நிலையில், இந்த, எச் - 4 விசாவில் உள்ள சிறப்பு பணி அனுமதி ஆவண திட்டத்தை ரத்து செய்ய, அதிபர் டொனால்டு டிரம்ப் பரிந்துரை செய்துள்ளார்.இந்த முடிவு, ஆயிரக்கணக்கான இந்தியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 'சிறப்பு பணி அனுமதி நடைமுறையை ரத்து செய்ய வேண்டாம்' என, அமெரிக்க அதிபரிடம் கோரிக்கை வைக்க, எச் - 4 விசா வைத்துள்ளோர் தரப்பில் முடிவுசெய்யப்பட்டது.

அமெரிக்காவில் வாழும், தகவல் தொழில்நுட்ப ஊழியர்களை ஒன்றிணைக்கும் விதமாக, 'ஐ.டி., ப்ரோ அலையன்ஸ்' என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது.இந்த அமைப்பின் உதவியுடன், 'எச் - 4 விசா வைத்துள்ளவர்களுக்குவழங்கப்பட்டு வந்த சிறப்பு பணி அனுமதியை ரத்து செய்ய வேண்டாம்' என, வலியுறுத்தி, வெள்ளை மாளிகையின் அதிகாரபூர்வ இணையதளத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.<> கையெழுத்து< இந்த மனுவுக்கு ஆதரவு தெரிவிப்போர், இந்த இணையதளத்தில் பதிவாகியுள்ள மனுவில் கையெழுத்திட வேண்டும். இந்த மனு தாக்கல் செய்யப்பட்ட ஒரு மாத காலத்திற்குள், இதற்கு ஒரு லட்சம் பேர் ஆதரவு தெரிவித்தால், இதை அதிபர் மாளிகை மறுபரிசீலனை செய்யும் என்பது அந்நாட்டு நடைமுறை. அமெரிக்காவில், எச் - 4 விசாவில் சிறப்பு அனுமதி பெற்று பணியில் இருப்பவர்களில், இந்தியர்களே அதிகம். எனவே, அதிபர் டிரம்பின் பரிந்துரை நடைமுறைக்கு வந்தால், 84 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள், வேலை இழக்கும் அபாயம் ஏற்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக