புதன், 27 மார்ச், 2019

கோவை ..7வயது சிறுமி சடலமாக மீட்பு : பெற்றோர், உறவினர்களிடம் போலீஸ் விசாரணை

  தினத்தந்தி :  கஸ்தூரிநாயக்கன்புதூர் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமி வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென மாயமானார். பல்வேறு இடங்களில் தேடியும் குழந்தை கிடைக்காததால், அதிர்ச்சி அடைந்த பெற்றோர், காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்நிலையில், வீட்டின் அருகே உள்ள சந்தில், துணியால் கட்டப்பட்ட நிலையில் அந்த சிறுமி சடலமாக கிடந்தார். தகவல் அறிந்து அங்கு வந்த பெரியநாயக்கன்பாளையம் டி.எஸ்.பி சம்பவ இடத்தை பார்வையிட்டு, சிறுமியின் பெற்றோர், உறவினர்களிடம் விசாரணை நடத்தினார். சிறுமியின் உடம்பில் ஆங்காங்கே காயங்கள் இருந்ததால், பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக