ஞாயிறு, 31 மார்ச், 2019

BJP யின் 3 வகை பக்தாள் .. திருந்தி ஆண்டி இந்தியன் ஆவார்களா?

புதிய இந்தியா - New India : நான் ஏன் இன்னும் மோடி பக்தராக இருக்கிறேன் என்று சுயமாக யோசிக்க தெரியாதவர்கள் கீழே உள்ளதை படித்து நீங்கள் எந்த வகையறா என்பதை முடிவு செய்துகொள்ளுங்கள்..
இந்த ஐந்து வருட மோடியின் கார்ப்பரேட், RSS, போட்டோஷாப் மற்றும் போலியான ஆட்சிய பாத்த அப்புறமும் நீங்க முட்டு கொடுக்குறீங்கன்னா கீழ உள்ள எதாவது ஒரு குரூப்ப சேந்தவங்களா தான் இருப்பீங்க..
பக்தாள் 1 - இவங்கள ரெண்டு ரூபா தேன்மிட்டாய் வாங்கி கொடுத்தோ, "ஜன கன மன" பாட்டு போட்டோ, மோடியின் "பாரத் மாதா கி ஜெ" வசனம் பேசியோ ஏமாத்தி விடலாம்.. இந்த மக்கள் எல்லாம் தினமலர் மட்டும் படிச்சு அரசியல் பேசுரவங்க.. தன்னோட கோவணம் உறுவப்பட்டது கூட தெரியாது. இன்னும் போட்டோஷாப் படம் குவைத்'த குஜராத்னு ஜெய்ஹிந்த் சொல்லி இன்னும் forward பண்ணிட்டு இருக்கும் மக்கள்... மற்றவர்களுக்கு மூணு மாசத்துல புரியுற விஷயம் இவங்களுக்கு போயி சேர மூணு வருஷம் ஆகும்... இவங்கள நினைச்சா தான் பாவமா இருக்கு.. இவர்கள் நல்லவர்கள்.. தேச பற்று உள்ளவர்கள்.. ஆனால் பாவம் இவர்கள் ஏமாளிகள்.. இவர்களை இவ்வளவு பெரிய முட்டாள் ஆக்கிய சாதனை மோடியை சாரும்...
பக்தாள் 2 - தான் ஏமாற்றப்பட்டது தெரியும்.. ஆனால் ஒத்துக்கொள்ள மனசு வராது.. இவ்வளவு நாளும் மோடியை காந்திக்கும், காமராஜர்க்கும் ஒப்பிட்ட மனசு.. அவ்வளவு எளிதில் மோடியை தூக்கி போட முடியுமா என்ன?? தனக்கு புரிந்தும் சப்பைக்கட்டு கட்டிக்கொண்டு இருப்பவர்கள்.
பக்தாள் 3 - கிரிமினல்ஸ், இந்தியாவை "இந்து பாகிஸ்தானாக" மாற்றத் துடிப்பவர்கள், இந்துத்துவா பேரை சொல்லி அத்தனை மொள்ளமாறி தனமும் செய்பவர்கள்.. ஆனால் வெளியே தேசபக்தி போர்வைக்குள் தன்னை ஒளித்து மக்களை ஏமாற்றுபவர்கள்.. 
இவர்களுக்கு நாட்டு நடப்பு நம்மை விட நன்றாவே தெரியும்.. மற்றவர்களுக்கு இவர்களை பற்றிய உண்மை தெரிய தெரிய.. திருந்துவதற்கு பதிலாகா மேலும் மேலும் பித்தலாட்டம் அதிகம் செய்பவர்கள்.. இவர்கள் தான் இந்த நாட்டின் சாப கேடு.. இந்தியா இவர்களிடம் தான் விழிப்பாக இருக்க வேண்டும்...
பக்தாள் 3 எப்பவும் பக்தாள் 1 & 2 வை ஏமாற்றும் வேலையை பார்ப்பார்கள்.. மோடி&கோ சொல்லும் பொய்யை நம்பும் இளிச்சவாயன் பக்தாள் ஆகுறான்.. புரிஞ்சவன் அந்த மாயை விலகி வெளியே வருவான்.. "ஆன்டி இந்தியன்" ஆகிறான்.
குறிப்பு: மேலே உள்ள பக்தாள் வகையறா உங்களது நண்பராகவோ or உறவினராக கூட இருக்கலாம். அவர்களுக்கு நாட்டின் உண்மையான நிலைமையை, மோடியைப்பற்றி்ய உண்மை செய்தியை புரியவைப்பது தான் உண்மையான "தேச பக்தி".🙏🙏🙏
- Swathi K

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக