வியாழன், 28 மார்ச், 2019

3 தொகுதிகளுக்கும் தேர்தல் இல்லை: தேர்தல் ஆணையம் ...திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம்

தினமலர் :புதுடில்லி : திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கு தற்போது தேர்தல் நடத்த முடியாது என சுப்ரீம் கோர்ட்டில் தேர்தல் கமிஷன் பதிலளித்துள்ளது. திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் ஆகிய 3 தொகுதிகளுக்கான சட்டசபை இடைத்தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என திமுக சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இவ்வழக்கு விசாரணையின் போது, 3 தொகுதிகளுக்கும் உடனடியாக தேர்தல் நடத்த முடியாது. சரியான காலம் வரும் போது தான் தேர்தல் நடத்த முடியும். அவசர கதியில் தேர்தல் நடத்த முடியாது என தேர்தல் கமிஷன் பதிலளித்தது. ஏப்ரல் 18 க்கு பிறகு கூட 3 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலை நடத்தலாம் என திமுக சார்பில் வாதிடப்பட்டது. இதனைக் கேட்ட சுப்ரீம் கோர்ட், தேர்தல் கமிஷனின் கோரிக்கையை ஏற்றது. மேலும், 3 தொகுதிகளுக்கும் உடனடியாக இடைத்தேர்தல் நடத்த தேர்தல் கமிஷனுக்கு கோர்ட் உத்தரவிட முடியாது என தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக