வியாழன், 21 மார்ச், 2019

ம.பி 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த மூன்று அண்ணன்கள்!

tamil.news18.com : மத்தியப் பிரதேசத்தில் 12 வயது சிறுமியை அவளது மூன்று சகோதரர்கள் பாலியல் வன்கொடுமை செய்து தலையை அறுத்து படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் கடந்த வாரம் தலை வெட்டப்பட்ட 12 வயது சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இதுதொடர்பாக காவல்துறை நடத்திய விசாரணையில் அந்தச் சிறுமியை அவளது மூன்று அண்ணன்களும் அவரது மாமாவும் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து தலையை அறுத்து கொலை செய்துள்ளனர் என்று தெரியவந்துள்ளது.< இதுகுறித்து தெரிவித்த காவல்துறை, ’12 வயது சிறுமியின்  மூத்த அண்ணன் அவளை பள்ளிக்குச் செல்ல அனுமதிக்கவில்லை. மாறாக, அவளை பாண்டா பகுதியிலுள்ள அவரது மாமா வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கே அந்த அண்ணனால் முதலில் அந்தச் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார்.


பின்னர், அங்கே, வந்த அவளுடைய 17 மற்றும் 19 வயது நிரம்பிய மற்ற அண்ணன்களும் அவரை தொடர்ச்சியாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அடுத்ததாக, அங்கே வந்த 40 வயது மாமாவும் அந்தச் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுதொடர்பாக காவல்துறையிடமும், வீட்டிலும் சிறுமி சொல்லிவிடும் என்று அஞ்சிய அவர்கள், அரிவாளால் சிறுமியின் தலையை வெட்டிப் படுகொலை செய்தனர்.

சிறுமியின் உடலை வயலில் கொண்டு வீசியுள்ளனர். மூத்த அண்ணன், அந்தச் சிறுமியை நீண்ட காலமாகவே பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டியதாக ஒப்புக்கொண்டுள்ளார். அந்தச் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட விவகாரம் அந்தச் சிறுமியின் அத்தைக்கு தெரியவந்துள்ளது.

அவர், இறந்த சிறுமியின் பக்கம் நிற்காமல், சிறுமியைக் கொலை செய்த கணவருக்கு ஆதரவாக இருந்துள்ளார். சிறுமியை யாரோ கடத்திவிட்டதாக பொய் கதையை உருவாக்கியுள்ளார். சிறுமியினை அத்தையும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்’ என்று தெரிவித்துள்ள

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக