ஞாயிறு, 3 பிப்ரவரி, 2019

அனில் அம்பானியின் RCom திவால்.. மக்களின் பணம் 50,400 கோடிகள் (50400000000000 ரூபாய்) கொள்ளை போனது ..

Swathi K : கடனை திருப்பி செலுத்த முடியாததால் அனில் அம்பானியின் RCom
நிறுவனம் திவால் ஆகிறது..
மக்களின் பணம் 50,400 கோடிகள் (50400000000000 ரூபாய்) "ஆட்டய" போட்டாச்சு..
RCom, controlled by businessman Anil Ambani, owed banks $7 billion as of March 2017 when it last made public its debt level, and more to vendors.
இந்த அனில் அம்பானிக்கு தான் HAL க்கு கிடைக்கவேண்டிய 30,000 கோடிகள் காண்ட்ராக்ட் தாரைவார்த்து கொடுத்துள்ளது மத்திய அரசு (டஸ்சால்ட் மூலம்).. விமானமோ, விமான உதிரி பாகமோ செய்யும் அனுபவம் கொஞ்சம் கூட இல்லாத ரிலையன்ஸ் டிபன்ஸ் கம்பெனிக்கு, ஆரம்பிச்சு 15 நாட்களுக்குள் 30,000 கோடிக்கு ஆர்டர்..
யோசிச்சு பாருங்க மக்களே!!.. ஒரு பக்கம் ரிலையன்ஸ் கம்யூனிகேசன் மூடு விழா நடத்திட்டு.. கடனை திருப்பி செலுத்தாத அனில் அம்பானியால் ஆயிரக்கணக்கான கோடிகள் வங்கிகளுக்கு நஷ்டம்... ஆனால் அதே அனில் அம்பானியால், ஆயிரக்கணக்கான கோடிகள் உடனடியாக அடுத்த தொழிலில் முதலீடு செய்யமுடிகிறது.. நம்மால் ஒரு லட்சம் கடன் வாங்கி.. தொழிலில் நஷ்டம் ஏற்பட்டால் நமது வாழ்வே முடிந்துவிடும்.. திரும்பி எழுவது கடினம்.. ஆனால் அவர்களால் அடுத்த நாளே முடியும்.. அங்கு தான் கார்ப்பரேட் அரசியல் நிற்கிறது..

இந்தியாவின் முதல் 20 கார்ப்பரேட் தலைவர்கள், RSS இவர்கள் தான் இந்த நாட்டை ஆண்டு வருகிறார்கள் என்பது வருத்தமான விஷயம்.. எந்த மத்திய அரசு வந்தாலும் கார்ப்பரேட் சாதகமாக இருக்கும் என்றாலும்.. இப்படி 100% கார்பரேட் கைக்கூலி ஆக மோடி அரசால் மட்டுமே முடியும்.. ஏனெற்றால் பிஜேபியையும், மோடியையும் முற்றிலும் வளர்த்தது கார்ப்பரேட், RSS.. வளர்த்தவர்களுக்கு நன்றிக் கடனாக இருப்பது தான நியாயம்🙏.

https://www.indiatoday.in/…/anil-ambani-s-rcom-files-for-ba…

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக