சனி, 2 பிப்ரவரி, 2019

அழகிரியை மீண்டும் திமுகவில் சேர்க்க என்ன தயக்கம்?

கருணாநிதி மறைவு பாஜகவில் இணைவாரா? tamil.oneindia.com -hemavandhana: அழகிரியை மீண்டும் சேர்த்துக்கொள்வாரா ஸ்டாலின்- வீடியோ சென்னை: கடைசி முயற்சியாக அழகிரியை ஒருமுறை கட்சியில் சேர்த்து கொள்வது பற்றி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பரிசீலிக்கலாமே என்ற கருத்து அக்கட்சியினராலேயே முன்வைக்கப்பட்டு வருகிறது.
ஸ்டாலினை போலவே இளம் வயதிலேயே அரசியலுக்கு வந்தவர்தான் மு.க.அழகிரியும். தென்மாவட்டங்களில் திமுகவை வளர்த்தெடுக்க கருணாநிதியால் பணிக்கப்பட்டதுகூட அழகிரியின் மேல் இருந்த நம்பிக்கைதான் காரணம். அதன்படியே ஒவ்வொரு தேர்தலின்போதும் தென்மாவட்டங்களை பற்றியே எந்த கவலையும் இல்லாமல் அழகிரி இருக்கும் தைரியம், நம்பிக்கையில் இருந்தார் கருணாநிதி.
ஆனால் காலம் மாற மாற.. காட்சிகளும் மாற மாற.. ஸ்டாலின் மேல் நேர்மறை விமர்சனங்களும், அழகிரி மீது எதிர்மறை விமர்சனமும் விழ ஆரம்பித்தது. இந்த எண்ணம் கடைசி வரை நிலைத்தும் விட்டது. தானாக முன்வந்து கட்சியில் தன்னை சேர்த்து கொள்ளும்படி அழகிரி சொல்லியும் திமுக தலைமை பிடி கொடுக்கவே இல்லை.



கிராம சபை கூட்டம்

இப்போது ஸ்டாலின், தன் மருமகனை டெல்லிக்கு கூட்டி போய் சோனியா, ராகுலிடம் அறிமுகப்படுத்திவிட்டு வந்தார். டெல்லி விவகாரங்கள் இனி அவருக்கு ஒதுக்கப்படுமாஎன தெரியவில்லை. அதேபோல, கிராம சபை கூட்டத்தில் மகனை முன்னிறுத்த தொடங்கி உள்ளார். தன் கட்சியிலிருந்தே பிரிந்து சென்ற மூத்த தலைவர்கள், "முன்னாள்"களை திரும்பவும் கட்சிக்கு கூட்டி வந்தார்.


செந்தில் பாலாஜி

செந்தில் பாலாஜி

ஸ்டாலின் முதல்வரே ஆக கூடாது என்று கங்கணம் கட்டிய வைகோ பக்கத்தில் இன்றைக்கு சேர்த்து கொள்ளவில்லையா? இவ்வளவு எதற்கு, மாற்று கட்சியிலிருந்த செந்தில் பாலாஜியையே அழைத்து வந்து பொறுப்பையும் கொடுத்து விட்டார்.



பாஜகவில் இணைவாரா?

ஆனால் ஏன் அழகிரியை மட்டும் ஸ்டாலின் இன்னும் சேர்க்கவில்லை என்று மட்டும் திமுக தரப்பிலேயே கேள்வி எழுந்துள்ளது. பலமுறை கெஞ்சி பார்த்தும் கட்சியில் சேர்க்காத நிலையில், அழகிரி நினைத்திருந்தால் வேறு ஒரு அமைப்பை தொடங்கி இருக்கலாம், அல்லது திமுகவை வெறுப்பேற்ற மாற்று கட்சியில் குறிப்பாக பாஜகவில்கூட இணைந்திருக்கலாம். (அப்படி பாஜகவில் இணைந்தால் அழகிரி காணாமலேயே போய்விடுவார் என்பதுவேறு கதை.)



கூட்டணி

ஆனால் இன்னமும் அழகிரி அமைதியாகத்தானே இருக்கிறார் என்றும் கருத்துக்கள் சொல்லப்படுகிறது. இப்போது கட்சியில் சேர்ந்திருக்கும் செந்தில்பாலாஜியைவிட அழகிரி ஒன்றும் கட்சிக்காக குறைவாக செயல்பட போவதில்லையே? வேறு வேறு கட்சிகளுடன் கூட்டணி வைத்த வைகோவை விட அழகிரி ஒன்றும் திமுகவை விட்டு தர மாட்டாரே?



கருணாநிதி மறைவு

ஜெயலலிதா இல்லாத நிலையில் ஆர்.கே.நகர் பறிபோனது, இன்று கருணாநிதி இல்லாத நிலையில் இன்னும் என்ன ஆகுமோ என்றும், அழகிரியை திரும்பவும் சேர்த்து கொண்டால் தென்மாவட்டங்களை பற்றி கவலையே படாமல் ஸ்டாலின் இருக்கலாமே என்றும் கூறப்படுகிறது.




ஜாக்டோ ஜியோ பிரச்சனைக்கு மட்டும் ஈகோ இல்லாமல் தமிழக முதல்வர் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று சொன்ன ஸ்டாலின், அதே ஈகோ இல்லாமல் சொந்த அண்ணனான அழகிரியுடன் பேச்சு நடத்தலாமே என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. தனிப்பட்ட முறையில் இதனை அணுகாமல் கட்சி ரீதியாக அணுகினால் அது திமுகவுக்குத்தான் நல்லதாக இருக்கும் என்பதே பொதுவான எதிர்பார்ப்பாக உள்ளது. செய்வாரா மு.க.ஸ்டாலின்?!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக