புதன், 27 பிப்ரவரி, 2019

நிர்மலாதேவிக்கு ஓராண்டாக ஏன் ஜாமீன் வழங்கவில்லை? - உயர் நீதிமன்றம் கேள்வி

tamil.thehindu.com - கி.மகாராஜன் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் அழைப்பு விடுத்தது தொடர்பாக உதவிப் பேராசிரியை நிர்மலாதேவி மீதான வழக்கை விசாரிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை இடைக்கால தடை விதித்துள்ளது.
நிர்மலாதேவி வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி சென்னையைச் சேர்ந்த அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் பொதுச் செயலர் சுகந்தி, உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வில் இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையிலும், ஒரு ஆண்டாக சிறையில் இருக்கும் நிர்மலாதேவிக்கு ஜாமீன் வழங்கவில்லை. பெரும் கொலைக் குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்கும் போது நிர்மலாதேவிக்கு ஜாமீன் வழங்காதது ஏன்? அவரை சிறையில் வைத்திருப்பது ஏன்? என கருத்து தெரிவித்தனர்.
பின்னர், ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிர்மலாதேவி வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக