செவ்வாய், 5 பிப்ரவரி, 2019

ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள், களப்பணியாளர்கள், தீவிர ஆதரவாளர்கள் தேர்தல் வாக்குசாவடிகளில் தவிர்க்கப்படுவர்??

Mahalaxmi : ஜாக்டோ-ஜியோ
நிர்வாகிகள், களப்பணியாளர்கள், தீவிர ஆதரவாளர்கள் யார், யார் எனக் கணக்கெடுக்கும் பணி முடுக்கி
விடப்பட்டுள்ளது. தேர்தல் வாக்குசாவடிகளில் அவர்களை தவிர்க்கவே இந்த கணக்கெடுப்பு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தேர்தல் நெருங்கி வரும் வேளையில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் கோபத்தில் இருப்பதால் அவர்கள் உள்ளடி வேலைகள் பார்க்கலாம் என சந்தேகிக்கிறது ஆளும் கட்சி.
இதனால், அவர்களுக்கு தேர்தலில் வாக்குசாவடி அதிகாரியாக பணி தரக்கூடாது. போராட்டத்தில் பங்கேற்காத மற்றவர்களுக்கு மட்டுமே அந்தப் பணியை கொடுக்க வேண்டும்'' என சில அமைச்சர்கள் அறிவுறுத்தி இருக்கிறார்களாம். அதற்கான கணக்கெடுப்பு பணிகளை உளவுத்துறை முடுக்கி விட்டுள்ளதாக கூறப்படுகிறது.
குறிப்பாக காலவரையற்ற வேலை நிறுத்தத்தின்போது கைதானவர்கள், நோட்டீஸ் பெற்றவர்களை நியமிக்கக்கவே கூடாது என்று ஆளுங்கட்சி சார்பாக தேர்தல் ஆணையத்தில் கோரிக்கையும் வைக்க இருக்கிறார்கள். இதனை தேர்தல் ஆணையம் ஏற்குமா என்பது தெரியவில்லை. இதனை மனதில் வைத்தே இன்று பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் ராமேஸ்வர முருகன் ஒரு அறிக்கையை வெளியிட்டு இருந்தார். அதில் 22- முதல் 30ம் தேதி வரை பள்ளிக்கு வராத ஆசிரியர்களின் பெயர் பட்டியலை பள்ளிக்கல்வித்துறை இணையதளத்தில் வெளியிடப்போவதாக அறிவித்து இருந்தார்.

தேர்தல் பணிகளில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை நிராகரிக்கப்போவதாக ஆளும் தரப்பு எடுத்த முடிவு எப்படியோ வெளியில் கசிந்து ஆசிரியர்கள், அரசு ஊழியர்களையும் சென்றைடைய அவர்கள் பயங்கர ஆத்திரத்தில் இருக்கிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக