வெள்ளி, 8 பிப்ரவரி, 2019

ராமலிங்கம் படுகொலைக்கு ஸ்டாலின் கண்டனம்… வன்முறைகளுக்கு முடிவு கட்ட வேண்டுகோள்

Dmk leader stalin has said that the assassination of ramalingam is highly condemnable tamil.oneindia.com - Keerthi: சென்னை:கும்பகோணம் ராமலிங்கம் படுகொலை செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனம் மேலதூண்டில் விநாயகம்பேட்டையைச் சேர்ந்தவர் பாமக முன்னாள் நகரச் செயலர் ராமலிங்கம். அவர், கடந்த 5-ம் தேதி தமது வாடகை பாத்திரக் கடையை மூடிவிட்டு, மகன் ஷியாம் சுந்தருடன் ஆட்டோவில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது, வாகனத்தை வழிமறித்த ஒரு கும்பல், ராமலிங்கத்தை அரிவாளால் வெட்டியதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இதுகுறித்து, ஷியாம் சுந்தர் கொடுத்த புகாரின்பேரில் திருவிடைமருதூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் முதல்கட்ட விசாரணையில், கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் என திருபுவனம் முஸ்லிம் வடக்கு வீதி யாகூப் மகன் சர்புதீன், முகமது ரிஸ்வான் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந் நிலையில், இந்த கொலைக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமது டுவிட்டர் பதிவில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். அந்த பதிவில் ஸ்டாலின் மேலும் கூறியிருப்பதாவது:
கும்பகோணம் ராமலிங்கம் படுகொலை செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. இந்த கொலையில் ஈடுபட்டோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களை நீதிமன்றத்தின் முன்பு நிறுத்தி விரைவில் தண்டனை பெற்றுக் கொடுத்து இதுபோன்ற வன்முறைகளுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று அவர் கூறியுள்ளா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக