ஞாயிறு, 24 பிப்ரவரி, 2019

கலைஞர் மீது ஏனிந்த காழ்ப்புணர்ச்சி?

1. நில உச்சவரம்பு சட்டம்:
அரசர்கள் காலத்தில் நிலங்கள் மூன்று நபர்களிடம் அடங்கியிருந்தது

a) ஜமீன்: அரசனின் உறவினர்கள் அல்லது பிரதிநிதி.
b) கணக்கப்பிள்ளை அல்லது அதிகாரி: ஜமீன் அல்லது சிற்றரசின் நம்பிக்கைக்கு உரியவர்கள். கபிஸ்தலம் மூப்பனார், உக்கடை தேவர், பூண்டி வாண்டையார், வடபாதிமங்களம் முதலியார் போன்றோர்.
c) பார்ப்பணர்கள்: அரசனால் கோவில் ஒன்று கட்டி அதனை சுற்றி 100 முதல் 1000 வேலி நிலங்களை தானமாக பார்ப்பணர்களுக்கு வழங்கப்பட்டது. ஏன் எதற்காக என்று அரசனுக்கும் பார்ப்பணருக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம். 1 வேலி நிலம் என்பது 7 ஏக்கர்(1 மா குறைவு). இந்த நிலங்களை அங்கே உள்ள இடைநிலை சாதி மக்களிடம் குத்தகைக்கு விட்டிருந்தனர்.
கலைஞர் அவர்கள் 1970ல் அதிகபட்ச நில உச்சவரம்பு 15 ஏக்கர் என்று குறைத்தது மட்டுமல்லாமல் உழுதவனுக்கே நிலம் சொந்தம் என்றும் குத்தகை பணத்தையும் நில உடமையாளர்களுக்கு தரவேண்டியதில்லை என்றும் சட்டம் இயற்றினார். இதனால் நிறைய பார்ப்பணர்கள் மற்றும் அதிகாரிகளின் வாரிசுகள் அரசன் மூலம் அடைந்த நிலங்களை இழக்க நேரிட்டது. கோபம்.
2. எல்லா சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டம்: அரசனையே கருவறைக்குள் விடாமல் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் ஒரு பறையர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரும் அர்ச்சகர் ஆகலாம் என்றால் விடுவார்களா.
அன்றைக்கு மக்களாட்சியின் நான்கில் மூன்று தூண்களான Executive, Judiciary and Press பார்ப்பணர்களின் ஆதிக்கத்தில் இருந்தது. அவர்கள் எழுதுவதுதான், அவர்கள் கூறுவதுதான் அதனை மக்கள் நம்ப வேண்டும்.

கலைஞரைப் பற்றி எவ்வளவு கீழ்த்தரமாக விமர்சிக்க முடியுமோ அவ்வளவு செய்து வஞ்சம் தீர்த்துக் கொண்டார்கள். அதனையும் RSS அடிமை எம் ஜி ராமச்சந்திரனை வைத்தே செய்தார்கள். நாம்தான், 1,76,000 கோடி பணத்தை ஆ.ராசா டெல்லியிலிருந்து! திருடி கலைஞரின் வீட்டுக்கள் (கலைஞருக்கே தெரியாமல்) புதைத்து வைத்து விட்டார் என்றால் அப்படியே நம்புவோமே.
'மெய்ப்பொருள் காண்பது அறிவு' நமக்குத்தான் கிடையாதே.
அவர் செய்த சாதனைகளை எல்லாம் மறைத்து அவரைப்பற்றி கீழ்த்தரமாக விமர்சிப்பது மட்டுமே தொழிலாக செய்து கொண்டு வந்ததால் மக்களும் அப்படியே நம்பினர்.
இதனைக் கேட்டவன் அரைமனதுடன் வேலையைப்பார், குடும்பத்தைப்பார் என்று அறிவுரை கூறிவிட்டு போய்ட்டான்.
மக்களிடம் நாம் கலைஞரின் சாதனைகளை பற்றி கூறினால் நம்மை தீண்டத்தகாதவர்களாக பார்க்கின்றனர்.
இதுதான் ஊடக வலிமை.
இன்றும் ஊடகங்களின் நிலைப்பாடு என்ன என்றுதான் எல்லோருக்கும் தெரியுமே.
- jeya kumar

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக