செவ்வாய், 26 பிப்ரவரி, 2019

பாமகவில் இருந்து நடிகர் ரஞ்சித் விலகினார் ..ஊழல் அமைச்சர்களுக்கு கூஜா தூக்க என்னால் முடியாது


zeenews.india.com :பாமக  மாநில துணை தலைவர் ரஞ்சித் கட்சியிலிருந்து விலகல்! பாமக மாநில துணை தலைவர் பதவி்யில் இருந்து விலகுவதாக நடிகர் ரஞ்சித் கோவையில் அறிவித்துள்ளார். வரும் மக்களவை தேர்தலில், அதிமுக உடன் பாமக கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாமக மாநில துணை தலைவரும், நடிகருமான ரஞ்சித் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கட்சியின் அடிப்படை கொள்கைகளுக்கு எதிராக செயல்படும் அதிமுகவுடன் எப்படி கூட்டணி வைக்க முடியும் என கேள்வி எழுப்பியுள்ள ரஞ்சித் கூட்டணி குறித்து அன்புமணி அளிக்கும் விளக்கங்கள் ஏற்கும் படி இல்லை. ஒரு கட்சியை தரக்குறைவாக விமர்சித்துவிட்டு, பின்னர் அவர்களுடன் கூட்டணி வைப்பது என்னால் ஏற்கமுடியவில்லை. அதனால் தான் கடியில் இருந்து விலகியுள்ளேன் என்று செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக