செவ்வாய், 26 பிப்ரவரி, 2019

இந்திய விமானப்படைத் தாக்குதல்.. மரங்கள் கீழே சரிவதை பார்த்தோம் . நேரில் பார்த்த பாகிஸ்தான் கிராமவாசிகள்

அதிகாலையில் வெடிச் சத்தம் கேட்டது. தொடர்ந்து நான்கு முறை கேட்டது. நாங்கள் மரங்கள் கீழே சரிவதை பார்த்தோம். வீடு ஒன்று சேதமாகியது”
tamil.thehindu.com :பாகிஸ்தானின் தீவிரவாத முகாம்களை குறிவைத்து இந்திய விமானப்படை நடத்திய தாக்குதல் குறித்து பாகிஸ்தான் கிராமவாசிகள் ஊடகங்களிடம் பகிர்ந்துள்ளன.
 புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய மிராஜ் 2000 போர் விமானங்கள் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இன்று அதிகாலை 3.30 மணியளவில் தாக்குதல் நடத்தின. 12 விமானங்கள், சுமார் 1000 கிலோ வெடிகுண்டைத் தீவிரவாத முகாம்கள் மீது வீசி, அவற்றை முற்றிலுமாக அழித்தன. இதில் பாலாகோட், சாக்கோட், முஸாஃபராபாத் ஆகிய இடங்களில் தாக்குதல் நடந்துள்ளன. அங்கு இயங்கி வந்த முக்கிய தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து பாகிஸ்தான் கிராமவாசி முகமத் அஜ்மல் கூறும்போது, ‘‘அதிகாலையில் வெடிச் சத்தம் கேட்டது. தொடர்ந்து நான்கு முறை கேட்டது. நாங்கள் மரங்கள் கீழே சரிவதை பார்த்தோம். வீடு ஒன்று சேதமாகியது” என்றார். இந்தியாவின் இந்தத் தாக்குதலில் பாகிஸ்தான் கிராம வாசிகள் சிலர் காயமடைந்தாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளன. ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் புகுந்து இந்திய விமானப்படைகள் ஜெய்ஷ் -இ-முகமது முகாம்களை குறி வைத்து தாக்குதல் நடத்திய து தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை மற்றும் இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பிடம் புகார் அளிக்க முடிவெடுக்கப்பட்டதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக