ஞாயிறு, 24 பிப்ரவரி, 2019

மற்றுமொரு அதிமுக எம்பி கார் விபத்தில் சிக்கினார் - கலக்கத்தில் அதிமுக வட்டாரம்

tamil.samayam.com/ :
aiadmk kallakurichi mp k. kamaraj stuck in car accidentகார் விபத்தில் சிக்கி விழுப்புரம் எம்.பி ராஜேந்திரன் உயிரிழந்த மறுநாள் மீண்டும் ஒரு அதிமுக எம்.பி காமராஜ் அவர்களின் கார் விபத்தில் சிக்கியுள்ளார்.
சேலம்: கார் விபத்தில் சிக்கி விழுப்புரம் எம்.பி ராஜேந்திரன் உயிரிழந்த மறுநாள் மீண்டும் ஒரு அதிமுக எம்.பி கார் விபத்தில் சிக்கியுள்ளார். விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்வானவர் அதிமுகவைச் சேர்ந்த ராஜேந்திரன். இவர், நேற்று அதிகாலை விழுப்புரம் மாவட்டத்திலிருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது, திண்டிவனம் அருகே வந்த போது கார் தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே பாலியாகினார். இந்நிலையில், இன்று சேலம் அயோத்தியாபட்டணம் அருகே மின்னாம்பள்ளியில் அதிமுக எம்.பி. காமராஜ்
சென்ற கார் விபத்தில் சிக்கினார். அவர் சென்ற காரின் டயர் வெடித்ததால் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக கூறப்பட்ட நிலையில், அவரின் காரின் குறுக்கே வந்த இருசக்கர வாகனம் மீது மோதுவதை தவிர்க்க காரை ஓட்டுனர் திருப்பியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது. இந்த விபத்தில் காமராஜ் காயமின்றி தப்பினார்.


காயமடைந்தவர்களை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மருத்துவமனையிலிருந்து காமராஜ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக