ஞாயிறு, 24 பிப்ரவரி, 2019

ராமதாஸ் வன்னியர்களுக்கு துரோகம் ? இட ஒதுக்கீட்டுக்கு எதிரான அதிமுக பாஜகவுடன் கூட்டணி


Prakash JP : வன்னியர் இட ஒதுக்கீட்டிற்காகத் தங்கள் உயிரையே இழந்த
21 வன்னியர்களின் தியாகத்தால் உருவான பாமக,
அந்த இடஒதுக்கீட்டை நசுக்கி அழிக்கும் பாஜக கூட்டணியில் சேர்ந்ததன் மூலம், தனது சுய லாபத்திற்காக, ஒட்டுமொத்த வன்னியர்களின் எதிர்காலத்தை நாசமாக்கி பெரும் துரோகம் செய்துள்ளார் ராமதாஸ்...
Prakash JP எழுதுகிறார்...
வன்னியர்களுக்குப் பாமக செய்யும் மிகப்பெரிய துரோகம், பிஜேபியுடன் கூட்டணி வைப்பது..
இப்போது நடக்கும் பிஜேபி மோடி ஆட்சியால் மத்திய மருத்துவ மேற்படிப்பில் ஓபிசி (BC & MBC) இட ஒதுக்கீடு நீக்கப்பட்டுவிட்டதால், பலநூறு பிசி / எம்பிசி மருத்துவர்களின் கனவில் மண்ணை அள்ளிப் போட்டது மத்திய ஆர்எஸ்எஸ் பாஜக இந்துத்துவ ஆட்சி.. இதைக் கண்டித்து அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டார்.
ஓபிசி கிரீமி லேயர் வருமான கணக்கெடுப்பில் மாத சம்பளத்தையும் விவசாய வருமானத்தையும் சேர்க்க மத்திய ஆர்எஸ்எஸ் பிஜேபி இந்துத்வா ஆட்சி ஆணையிட்டதால், நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான லட்சம் பிற்படுத்தப்பட்ட மிகப் பிற்படுத்தப்பட்ட மாணவர்களும் இளைஞர்களும் கிரீமிலேயர் என்னும் வரம்பில் வந்துவிடுவார்கள்..

அவர்களுக்கு ஓபிசி இட ஒதுக்கீடு கிடைக்காது.. இவர்களின் இடங்கள் அனைத்தையும் பார்ப்பனர் உள்ளிட்ட மேல்சாதியினர் ஆக்கிரமித்துக் கொள்வார்கள்..
மத்தியக் கல்வி நிறுவனங்களில் பேராசிரியர் பணிக்கு புது ஆப்பு...
காலியிடங்களை கணக்கிடும் முறையை பிஜேபி அரசு மாற்றி அமைத்தால், BC/MBC/OBC மற்றும் SC/ST களுக்கு கிடைக்கவேண்டிய பணியிடங்கள் மிகவும் குறைந்து, அந்த இடங்களை முன்னேறிய வகுப்புகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது...
இப்படிப் பிற்படுத்தப்பட்ட & மிகப் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான ஓபிசி இட ஒதுக்கீட்டைச் சரியான முறையில் அமல்படுத்தாமல், பல்லாயிரக்கணக்கான பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட இளைஞர்களின் எதிர்காலத்தில் மண்ணள்ளிப் போட்டுவிட்டு, மறுபக்கம் மத்திய கல்வி & வேலைவாய்ப்பில் 70% இருக்கும் பிராமணர் ஒருசில முற்பட்ட சாதிகளுக்கு கூடுதலாக மேலும் 10% இடஒதுக்கீட்டை மத்திய ஆர் எஸ் எஸ் பாஜக ஆட்சி..
ஏற்கனவே மத்திய அரசின் கல்வி  & வேலைவாய்ப்புகளிலும் OBC (BC&MBC)க்கள் வெறும் 17% சதம் தான் இருக்கிறார்கள்..
இப்பொழுது அதற்கும் வேட்டுவைத்துள்ளது பிஜேபி மோடி அரசு.. இப்படி இட ஒதுக்கீட்டிற்கும், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் பரம விரோதியாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பாஜகவுடன் கூட்டணி அமைத்து,
இட ஒதுக்கீட்டிற்காக உயிரை - வாழ்க்கையைத் தியாகம் செய்த அப்பாவி வன்னியர்களுக்குப் பச்சைத் துரோகம் செய்து, வன்னியர்களின் எதிர்கால வாழ்வில் மண்ணை அள்ளிப் போட்டுள்ளார் டாக்டர் ராமதாஸ்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக