வியாழன், 7 பிப்ரவரி, 2019

சின்னத்தம்பியின் நடமாட்டத்தை பற்றிய அறிக்கை .. சென்னை உயர்நீதிமன்றம

சின்னத்தம்பி நடமாட்டம்: ஐகோர்ட் உத்தரவு
தினமலர் : சென்னை: விலங்குகள் நல ஆர்வலர் முரளிதரன் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் , காட்டு யானை சின்னதம்பியின் நடமாட்டம் குறித்து, வரும் 12க்குள் அறிக்கை அளிக்க வேண்டும் என வனத்துறைக்கு உத்தரவு பிறப்பித்து உள்ளது. இடம்பெயர்ந்தது .
கோவை சின்னதடாகம் பகுதியில் சுற்றி வந்த காட்டு யானை, சின்னதம்பியை வனத்துறையினர், மயக்க ஊசி செலுத்தி பிடித்து, டாப்சிலிப் வனப்பகுதியில் விட்டனர்.அங்கு இருக்காமல், நுாறு கி.மீ., துாரம் பயணம் செய்து, உடுமலை பகுதிகளில், கடந்த ஆறு நாட்களாக உலா வருகிறது. அமராவதி சர்க்கரை ஆலை, கரும்பு பண்ணையில், ஐந்து நாளாக முகாமிட்டிருந்தது.
இந்த யானை, தற்போது செம்பழனிபுதூர் பகுதிக்கு இடம்பெயர்ந்தது. சாலை மறியல் காட்டு யானை சின்னதம்பி கடந்த 3 நாட்களாக உடுமலையை சுற்றி உள்ள பகுதிகளில் சுற்றி திரிகிறது. விளைநிலங்கள், குடியிருப்பு பகுதிகளில் சின்னதம்பி யானை சுற்றி திரிவதால் விளைநிலங்கள் சேதமடைந்துள்ளதால், சின்னதம்பி யானையை அப்புறப்படுத்த வலியுறுத்தி அப்பகுதி மக்கள் பழனி சாலையில் மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது<

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக