வியாழன், 7 பிப்ரவரி, 2019

கொலையான சந்தியாவுக்கு 34.. சைக்கோ இயக்குனர் பாலகிருஷ்ணனுக்கு 51.. இவன் இயக்கிய காதல் இலவசம் விடியோ

வயது வித்தியாசம் பேரிழப்பு tamil.oneindia.com - lakshmi-priya.: பெருங்குடி கொலையில் திடீர் திருப்பம்! பரபர பின்னணி!- வீடியோ சென்னை: தூத்துக்குடி சந்தியாவுக்கும், பாலகிருஷ்ணனுக்கும் இடையே வயது வித்தியாசம் அதிகமாக இருந்ததே அவர் கொலையுண்டதற்கு காரணமாக கூறப்படுகிறது.
சென்னை பெருங்குடி குப்பைமேட்டில் இருந்து கடந்த 21-ஆம் தேதி கண்டெடுக்கப்பட்ட கை, கால்கள் தூத்துக்குடியை சேர்ந்த சந்தியாவினுடையது என தெரியவந்தது. இதையடுத்து பள்ளிக்கரணை போலீஸார் இரு வாரங்களாக விசாரணை நடத்தி தற்போது கொலை செய்த அவரது கணவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.
சந்தியாவுக்கு அவரது 16-ஆவது வயதில் திருமணம் நடந்ததாம். அவர் மீது ஆரம்பத்திலிருந்தே சந்தேகப்படுவதுதான் பாலகிருஷ்ணனின் வேலை என கூறப்படுகிறது. அவரது எந்த ஆண்களுடன் பேசக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்துள்ளார்.





வயது வித்தியாசம்

வீட்டு கேட் தொடங்கி குளியலறை வரை சிசிடிவி கேமராக்களை நிறுவியுள்ளார். இத்தகைய சந்தேகம் சந்தியா மீது வந்ததற்கு காரணம் அவரது அழகும், இளமையும், இருவருக்குமிடையே உள்ள வயது வித்தியாசம்தான். பாலகிருஷ்ணனுக்கு தற்போது 51 வயதாகிறது.





சிறுவயது

ஆனால் சந்தியாவுக்கோ 34 வயதாகிறது. இதனால் உடல் தேவையை பூர்த்தி செய்து கொள்ள அவர் வேறு ஆண்களை அணுகுவார் என்ற சந்தேகம் பாலகிருஷ்ணனுக்கு இருந்திருக்கிறது. இதன் காரணமாகவே அவர் கண்டந்துண்டமாக வெட்டி எறிந்துள்ளார்.





நல்ல கருத்துகள்

ஒரு இயக்குநர், சமுதாயத்துக்கு நல்ல கருத்துகளை முன் வைப்பார் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் இதுபோல் சைக்கோ கொலை செய்து விட்டு சமுதாயத்துக்கு தவறான முன்னுதாரணமாக இருந்துவிட்டார். அழகு இருந்தால் அவர் பல ஆண்களை வளைப்பார் என்ற தவறான யூகத்தின் அடிப்படையில் அந்த பெண்ணுக்கு பல முறை தலைமுடியை மொட்டை அடித்து கொடுமைப்படுத்தியுள்ளார்.





ஒப்படைத்திருக்கலாம்

ஒப்படைத்திருக்கலாம் தனக்கு பிடிக்காத அந்த பெண்ணை இப்படி சித்ரவதை செய்வதற்கு பதில் அவரை அவரது பெற்றோரிடம் அனுப்பியிருக்கலாம். இதனிடையே கொடுமை தாளமுடியாமல் சந்தியாவே தூத்துக்குடி மகளிர் நீதிமன்றத்தில் விவாகரத்துக்கு விண்ணப்பித்துள்ளார். எனவே பரஸ்பரம் விவாகரத்து பெற்று கொண்டு பாலகிருஷ்ணன் தனக்கென ஒரு பாதையில் சென்றிருக்கலாம்.





பேரிழப்பு

ஆனால் எதையும் செய்யாமல் ஒரு கொலை செய்ததோடு அதை மறைக்க சைக்கோ போல் உடலை வெட்டியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் உண்மையில் சைக்கோவா இல்லை தான் அனுபவிக்காதது யாரும் அனுபவிக்கக் கூடாது என்ற மனோபாவமா என தெரியவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக