ஞாயிறு, 17 பிப்ரவரி, 2019

அன்புமணிக்கு எதிராக காடுவெட்டிகுரு குடும்பம்!- தேர்தலில் போட்டியிட முடிவு

காடு வெட்டி குரு குடும்பத்தினர்vikatan.com வீ கே.ரமேஷ்" : ``வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அன்புமணி எங்கு நிற்கிறாரோ அங்கு ஜெ.குருவின் அம்மா கல்யாணியை நிறுத்துவோம். அன்புமணியைப் படுதோல்வி அடையச் செய்வோம்'' என்று காடு வெட்டி குடும்பத்தினர் ஆவேசத்துடன் கூறினர்.
சேலத்தில் `மாவீரன் ஜெ.குரு வன்னியர் சங்கம்' என்ற புதிய அமைப்பை மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குருவின் அத்தை மகன் வி.ஜி.கே.மணி, குருவின் தங்கை மீனாட்சி, மருமகன் மனோஜ் மற்றும் வேங்கை அய்யனார் ஆகியோர் தொடங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்துகொண்டார்கள்.
இதுபற்றி குருவின் அத்தை மகன் வி.ஜி.கே.மணி கூறுகையில், ``இந்தக் கூட்டத்துக்கு என் மாமா குருவின் மகன் கனலரசன் வருவதாக இருந்தது. ஆனால், எங்க குடும்ப உறுப்பினர்கள் 8 பேர் மீது கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல் எனப் பல வழக்குகள் போட்டு தடுப்பதாலும், பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ் குடும்பத்தால் அவரின் உயிருக்கு ஆபத்து இருப்பதாலும் இன்று அவரைக் கூட்டி வர முடியவில்லை.


வன்னியர் இன மக்களுக்குத் துரோகம் செய்யும் ராமதாஸை மக்கள் தனிமைப்படுத்த வேண்டும். ராமதாஸ் எங்க குடும்பத்தை சித்ரவதை செய்கிறார். பாட்டாளி மக்கள் கட்சிக்காக 30 ஆண்டுகளாக உழைத்த எங்க மாமாவைக் கொன்றுவிட்டார்கள். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அன்புமணி எங்கு நிற்கிறாரோ அங்கு ஜெ.குருவின் அம்மா கல்யாணியை நிறுத்துவோம். அன்புமணியைப் படுதோல்வி அடையச் செய்வோம். மாவீரன் ஜெ.குரு வன்னியர் சங்கத்தின் மூலம் எங்க சமுதாய மக்களின் படிப்புக்காகவும் விழிப்பு உணர்வுக்காகவும் அரசு வேலைக்காகவும் பாடுபடுவோம்’’ என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக