வெள்ளி, 8 பிப்ரவரி, 2019

கமலஹாசனின் மக்கள் நல கூட்டணிதான் மக்கள் நீதி மையம்.. திராவிட கட்சிகள் அழுக்கு பொதிகளா? வீடியோ


Gopal Pillai Shanmugakani : சீச்சீ இந்தப் பழம் புளிக்கும்!
கமலஹாசனின் இன்றைய பேட்டி இதைத்தான் நினைவுறுத்துகிறது. திமுகவுடன் கூட்டு சேர காங்கிரஸ் மூலமாக முயற்சித்து அந்தப்பொதியை நாங்கள் சுமக்கமுடியாது என்று திமுக தலைமை மறுத்துவிட்டது. பார்ப்பனீயத்தை, பாஜக - II வை நாங்கள் மீண்டும் வளர உதவமாட்டோம் என்று திமுக ஒதுங்கிய காரணத்தால், தனிமரமாக விடப்பட்ட காரணத்தால், சீச்சீ இப் பழம் புளிக்கும் என்கிறார் மனிதப்பதர் கமலஹாசன். திமுகவை பொதி என்கிறார்.
பொதி என்றால் அழுக்கு என்று புதிய வியாக்கியானம் வேறு கூறுகிறார். திமுக ஊழல் கட்சியாம். ஊழல் என்ற அபாண்டத்தை உடைத்தெறிந்து தெள்ளிய நீர் போன்று இருக்கிறது திமுக. அப்பழுக்கற்ற தலைமையைக் கொண்டது திமுக. உங்களின் மனநிலை வல்லவனைக் கண்டு இயலாதவன் கொள்ளும் பொறாமை, அறிஞனைக் கண்டு மூடன் கொள்ளும் பொறாமை, கலாசர பெருமை, நாகரீக வளமை கொண்ட திராவிடத்தைப் பார்த்து ஆரியம் கொள்ளும் பொறாமை. தனி மனித ஒழுக்கமில்லாத ஒரு மனிதன் பண்பட்ட இயக்கத்தை குற்றம் சொல்வது பிச்சைக்காரன் வசதியானவனைப் பார்த்து அங்கலாய்ப்பதற்குச் சமம். 

இவர்தான் வாசனையும், விஜய்காந்தையும், அன்புமணியையும் கூவி கூவி அழைக்கிறார். மீண்டும் ஒரு மக்கள் நலக் கூட்டணிக்கு இவர்கள் யாரும் தயார் இல்லை. வேண்டுமானால் இவர் நாம் தமிழர் கட்சியுடன் இணைந்து நோட்டாவுடன் போட்டியிடலாம்.
கமலஹாசனுக்கு ஒரு அறிவுரை - முதலில் நீங்கள் தமிழில் புரியும்படியாகப் பேசுங்கள். உங்கள் கொள்கைகளை தமிழ் நன்றாகப் பேசக்கூடிய உங்கள் இயக்கத் தோழர்கள் மூலம் மக்களிடம் எடுத்துச் சொல்லுங்கள். நீங்கள் செய்யப்போகும் மாற்றம் பற்றிக் கூறுங்கள். மாநில சுய ஆட்சி பற்றியும், நீட் பற்றியும், ஹைட்ரோகார்பன் திட்டம் பற்றியும், நீட்ரினோ பற்றியும் உங்கள் நிலைப்பாட்டைச் சொல்லுங்கள். திமுக பதினெட்டு ஆண்டுகள் கழித்தே ஆட்சியைப் பிடித்தது. ஆட்சியைப் பிடித்ததுமட்டுமல்ல, மக்களுக்கு அளப்பரிய சேவை செய்தது, கல்வியில் புரட்சி செய்தது, பொது வினியோகத்தில் இந்தியாவிற்கே எடுத்துக்காட்டாய் விளங்கிது, சிறந்த மருத்துவத்தை ஏழைகளும் பெறமுடியும் என்ற நிலையை உருவாக்கியது, தொழிற் துறையில் பெரும் மாற்றங்களை உருவாக்கியது, பொருளாதாரத்தில் தமிழகத்தை முன்னணி மாநிலமாக்கியது.
நீங்கள் முதலில் உங்களை நிலை நிறுத்திக்கொள்ளுங்கள், மக்களின் செல்வாக்கைப் பெறுங்கள். பின்பு தேர்தலில் நிற்கலாம். நீங்களெல்லாம் எம்ஜிஆர் ஆகமுடியாது.
கலைஞர் அருகில் அமர்ந்துகொண்டிருந்த நேரத்தில் அவர் முன்னால் சிரித்துக்கொண்டும், நெஞ்சத்தில் வஞ்சத்தையும் வைத்துக்கொண்டிருந்தது இன்றன்றோ புரிந்தது எங்களுக்கு. உங்கள் கூற்று சீச்சீ இப் பழம் புளிக்கும் என்பதற்குச் சமம் என்று மக்கள் நன்கு அறிவர். திமுகவை பொதி என்று கூறிய நீங்கள் தற்போது தமிழக மக்களின் கேலிப் பொருள் என்பதையும் அறிந்துகொள்ளுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக