திங்கள், 25 பிப்ரவரி, 2019

திருமா :எந்தச் சமூகமும் தங்களை தற்காத்துக்கொள்ள அமைப்பாக திரள வேண்டும்: விழுப்புரம் பழங்குடியினர் மாநாட்டில் ..

THE HINDU TAMIL : விழுப்புரத்தில் பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம், பழங் குடியினர் விடுதலை இயக்கம், காட்டு நாயக்கன் சங்கம் மற்றும் விடு தலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் பழங்குடியினர் மாநாடு நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இம்மாநாட்டில் திமுக முன்னாள் அமைச்சர் க.பொன்முடி, சமூக சமத்துவப்படை தலைவர் ப.சிவகாமி, திராவிடர் விடுதலைக் கழகம் தலைவர் கொளத்தூர் மணி, மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலர் ப.அப்துல்சமது, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் சிந்தனைச்செல்வன், துரை.ரவிக்குமார், விழுப்புரம் மாவட்ட பழங்குடியினர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பிரபா கல்விமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இம்மாநாட்டில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் பேசிய தாவது:

பழங்குடி சமூகம் சொல்லில் விவரிக்க முடியாத கொடுமைகளை சந்திக்கிறது. கேட்பாரற்ற சமூகமாக அரசு ஒடுக்குமுறையாலும் இன்னல்களை சந்திக்கின்றனர். எந்த சமூகமும் தங்களை தற்காத்துக்கொள்ள, முதலில் அமைப்பாக திரள வேண்டும். நாம் தனித்தனி மனிதர்களாய் சிதறிக்கிடக்கிறோம். அரசியல் வலிமை பெற வேண்டும். நம்மை தற்காத்துக் கொள்ள அமைப்பு அவசியம்.
பழங்குடி மக்கள் பூர்வீக குடிகள், இந்தியா முழுவதும் ஒடுக்கப்படுகின்றனர். பழங்குடி மக்கள் பாதிப்புக்கு தனி நபர் போராட முடியாது. பழங் குடிகள், தாழ்த்தப்பட்ட மக்கள் அரசியல் ரீதியாக புறக்கணிக்கப் படுகின்றனர்.
பெரிய அரசியல் கட்சியில் முக்கிய பொறுப்புகளில் இவர்கள் வர முடியாது. கட்சி அதிகாரத்தை யும், ஆட்சி அதிகாரத்தையும் பகிர்ந்துகொள்ள வாய்ப்பு கிடைக் காது. ஆற்றல் நமக்குள் இருக்கிறது. தாழ்வு மனப்பான்மை அச்சத்தை உடைத்தெரிந்து வர வேண்டும். அடிமை விலங்கை தகர்க்க முடியும். அதற்காக ஒரு அமைப்பிலும், அரசியலிலும் பங் கெடுக்க வேண்டும்.
தாழ்த்தப்பட்ட மக்கள் தலை நிமிர்ந்து நடப்பதை சாதித்திருக்கி றது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. பழங்குடி மக்களுக்கும் விசிக போராடி வருகிறது. தமிழக காவல் துறை எங்கு குற்றம் நடந்தாலும், அப்பாவி குறவர்களை பிடித்து துன்புறுத்தி வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
பழங்குடியினருக்கு மனைப் பட்டா வழங்க வேண்டும். சாதிச் சான்று வழங்க வேண்டும். வன் கொடுமை தடுப்புச் சட்டத்தை சரி யாக அமல்படுத்த வேண்டும். பழங் குடியினர் மீதான பொய் வழக் குகளை திரும்பப்பெற வேண்டும்.
இடஒதுக்கீட்டை சரியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 23 அம்ச கோரிக்கைகள் இம்மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக