திங்கள், 25 பிப்ரவரி, 2019

குஷ்பூ விருதுநகரில் போட்டி இடுகிறார் ... நம்பிக்கையான வட்டார தகவல்..

/tamil.oneindia.com :சென்னை: போற போக்கை பார்த்தால் இந்த முறை குஷ்பு தேர்தலில் வெற்றி பெற்று டெல்லி சென்றுவிடுவார் என்றே தெரிகிறது. காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 10 தொகுதிகளை பெறுவதில் காங்கிரஸ் தலைவர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். 
இந்த முறை காங்கிரஸ் அடித்து பிடித்து 10 தொகுதிகளை வாங்கியிருக்கிறது. அந்த வகையில் கன்னியாகுமரி, விருதுநகர், தேனி, ராமநாதபுரம், ஈரோடு, திருவள்ளூர், சிவகங்கை, ஆரணி, சேலம், புதுச்சேரி ஆகிய தொகுதிகளை ஒதுக்குமாறு காங்கிரஸ் வலியுறுத்தி வருவதாகவும் தெரிகிறது. 
காமராஜரின் மண் விருதுநகர் ..தொகுதியை பொறுத்தமட்டில் காங்கிரஸ் ஆதரவு நிறைய உள்ள தொகுதி. இங்கு மாணிக்தாகூர்தான் ரொம்ப பிரபலம். இவர் வைகோவையே தோற்கடித்தவர். ராகுல்காந்தியின் நெருங்கிய நண்பர். ராகுலின் விருப்பம் காரணமாகவே பலமுறை போட்டியிட்டவரும்கூட. திமுக-காங்கிரஸ் திமுக-காங்கிரஸ் ஆனால் கடந்த முறை அதிமுகவின் ராதாகிருஷ்ணன் சிட்டிங் எம்பியாக இருக்கிறார். 
இந்த முறையும் அதிமுக சார்பில் ராதாகிருஷ்ணனே போட்டியிட விரும்புகிறார். ஆனால் தலைமை இன்னும் முடிவு செய்யவிலை. ஆனால் திமுக-காங்கிரஸ் கூட்டணி சார்பாக விருதுநகர் தொகுதியில் போட்டியிட குஷ்புவின் பெயர் அடிபடுகிறது. 
 
"இதுவரை எனக்கு சீட் வேண்டும் என்று நான் கேட்டதில்லை, ராகுல் என்ன சொல்கிறாரோ அதன்படி நடப்பேன். போட்டியிட சொன்னால் போட்டியிடுவேன். பிரசாரம் மட்டும் செய்ய சொன்னால் பிரசாரம் செய்வேன்" என்று குஷ்பு சொல்லி வருகிறார். இருந்தாலும் விருதுநகர் குஷ்புக்கு ஒதுக்கப்படும் என தெரிகிறது. 
 
ஏனெனில் விருதுநகர் மட்டுமல்லாது குஷ்பு ஒட்டுமொத்தமாகவே பிரபலமான நபர்... விஐபி வேட்பாளர்... அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்... ராகுலுடன் நேரடி தொடர்பில் இருப்பவர்... இதன் அடிப்படையிலேயே குஷ்பு களம் காண போவதாக சொல்லப்படுகிறது. 

நாடார் இன ஓட்டுக்கள் என்று பார்த்தாலும், சிறுபான்மையினரின் ஓட்டுக்கள் இதுவரை காங்கிரசுக்கு நிறையவே விழுந்திருக்கிறது. அந்த அடிப்படையில் குஷ்பு வெற்றி பெற நிறைய வாய்ப்புகள் உள்ளதாம். இதைதவிர அதிமுக மீதான அதிருப்தி ஓட்டுக்களும் நிச்சயம் குஷ்புக்குதான்.
 
வெற்றி நிச்சயம் ..பாஜக வேட்பாளர் யார் என்று இதுவரை முடிவு செய்யவில்லை. ஆனால் "தாம்பரத்தை தாண்டினால் தாமரையே தெரியாது" என்று குஷ்பு அடிக்கடி சொல்வார். அதனால் யார் நிறுத்தப்பட்டாலும் அதைப்பற்றி கவலைப்பட மாட்டார். 
 
இவ்வளவு காலமாக அரசியலுக்கு வந்து வெறும் பிரச்சாரம் மட்டுமே மேற்கொண்டுவந்த குஷ்பு இந்த ஸ்டார் வேட்பாளர் ஆகபோகிறார் என்றும் வெற்றிக்கனியை பறித்து கொண்டு நேராக டெல்லிக்கு போவார் என்றும் உறுதியாக நம்பப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக