ஞாயிறு, 10 பிப்ரவரி, 2019

மோடிக்கு ஹேட்ரிக் அவமானம்: 3வது முறையாக டிரெண்டாகும் #GoBackModi


வெப்துனியா :மக்களவைத் தோ்தல் நெருங்குவதால் தோ்தல் பிரசாரத்திற்காக பிரதமா் நரேந்திர மோடி இன்று திருப்பூா் வருகிறார். இதனால் இப்போதே டிவிட்டரில் #GoBackModi டிரெண்டாக்கப்பட்டு வருகிறது.தமிழகம் வரும் மோடி நீல வழித்தடத்தில் ஆயிரம் விளக்கு, எல்.ஐ.சி, அரசினா் தோட்டம், உயா் நீதிமன்றம், மண்ணடி மற்றும் வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையங்களை காணொலிக் காட்சி மூலமாக தமிழக முதல்வா் பழனிசாமியுடன் இணைந்து திறந்து வைக்கிறார்.">இந்த நிகழ்ச்சியில் துணைமுதல்வா் ஓ.பன்னீா் செல்வம், தமிழக அமைச்சா்கள் ஜெயகுமார், எம்.சி. சம்பத், சட்டப்பேரவைத் தலைவா் தனபால் உள்ளிட்டோல் கலந்து கொள்கின்றனா்.

இதற்கு முன்னர் மோடி இரண்டு முறை தமிழகத்திற்கு வந்த போது #GoBackModi என்ற ஹேஷ்டேக் தேசிய அளவில் தமிழர்களாக் டிரெண்டாக்கப்பட்டது. இப்போது இது மூன்றாவது முறை.

ஆனால், இதில் சுவாரஸ்யம் என்னவெனில் தமிழக மக்கள் மட்டுமின்றி ஆந்திரா மக்களும் இந்த ஹேஷ்டேக்கை டிரெண்டாக்கி வருகின்றனர்.
GoBackModi என்ற ஹேஷ்டேக் மட்டுமின்றி #GoBackSadistModi என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி டிரெண்டாக்கி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக