ஞாயிறு, 3 பிப்ரவரி, 2019

15 ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றிய பேரழகி!


cinemanews.info - :
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்தவர் உதயகுமார். திருமணமாகி விவாகரத்து பெற்ற இவர், சிங்கப்பூரில் பணியாற்றி வந்த போது, மேட்டர்மோனி மூலமாக திருச்சி கருமண்டபம் நேரு நகரை சேர்ந்த மகாலட்சுமி என்பவரை தேர்தெடுத்து 2017ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். மன்னார்குடி வ.உ.சி. நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் புது மணத்தம்பதியினர் குடியேறி உள்ளனர். சில நாட்களுக்கு பிறகு மீண்டும் சிங்கப்பூருக்கு உதயகுமார் வேலைக்கு சென்று விட்டார். இந்நிpலையில் சில மாதங்கள் கழித்து அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட மகாலட்சுமி தான் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தார்.

மகிழ்ச்சியில் துள்ளி குதித்த உதயகுமார் உடனடியாக சிங்கப்பூரில் இருந்து மன்னார்குடிக்கு திரும்பி உள்ளார். வீடு திரும்பிய அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. காரணம் வீடு பூட்டப்பட்டு இருந்தது. அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் விசாரித்ததில் வீட்டில் உள்ள பொருட்களை எல்லாம் வாகனத்தில் ஏற்றி கொண்டு மகாலெட்சுமி சென்று விட்டதாக அவர்கள் கூறி உள்ளனர்.

இதில் அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக மகாலட்சுமியை தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளார். ஆனால் அவரின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. பல்வேறு இடங்களில் தேடிய அவர் இறுதியாக மன்னார்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மனைவியை காணவில்லை என்று புகார் அளித்துள்ளார்.
எதேச்சையாக மனைவியின் மின்னஞ்சலை திறந்து பார்த்து உள்ளார். அங்கு அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில் மின்னஞ்சல் மூலமாக மகாலட்சுமி ஏராளமான ஆண்களுடன் தொடர்பு கொண்டுள்ளது தெரிய வந்தது. அதில் பல ஆண்களுடன் உங்களை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக மகாலட்சுமி கூறி இருந்துள்ளார். மேலும் படுக்கையறை ரகசியங்கள் உள்ளிட்ட பல ஆபாச வாக்கியங்கள், பல ஆண்களோடு அவர் தொடர்ந்து சாட் செய்து வந்திருப்பதை கண்டு உறைந்து போய் உள்ளார்
மேலும் அந்த மின்னஞ்சலில் மகாலட்சுமிக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இருந்ததும், கருவுற்ற நிலையில் முதல் கணவர் அடித்து உதைத்ததால், கரு கலைந்து விட்டதாகவும் அவர் பதிவு செய்து வைத்திருந்தது தெரிய வந்தது. இதனால் ஆத்திரமுற்ற உதயகுமார் மகாலட்சுமியை பல்வேறு இடங்களில் தேடி அலைந்து உள்ளார். திருச்சி கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் இருந்து வந்த தொலை பேசி அலைப்பில் உதயகுமார் எட்டி உதைத்து, மகாலட்சுமிக்கு கரு கலைந்துவிட்டதாக புகார் வந்துள்ளது, உடனடியாக விசாரணைக்கு வாருங்கள் என்று அழைக்கப்பட்டு உள்ளார். அது குறித்து வழக்கு பதியப்பட்டு நடைபெற்று வருகிறது.
இது குறித்து உதயகுமார் தனிப்பட்ட முறையில் நடத்திய விசாரணையில் மகாலட்சுமி, உறையூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கருகலைப்பு செய்து கொண்டது தெரிய வந்தது. அதற்கான ஆதாரங்களை கைப்பற்றி கொண்டார் உதயகுமார். இந்நிலையில் அவரின் மின்னஞ்சலை தரவாக சோதனையிட்ட உதயகுமாருக்கு தலையே சுற்றியது. காரணம் மகாலட்சுமிக்கு 15க்கும் மேற்பட்ட ஆண்களுடன் திருமணம் நடைபெற்று இருந்தது தெரிய வந்தது.

ஜோடி ஜோடியாய் பல்வேறு ஆண்களுடன் அவர் மனைவியாய் நிற்பது போன்ற புகைப்படங்கள் ஏராளமான கிடைத்துள்ளது. தனது அனுமதி பெறாமல் கரு கலைப்பு செய்திட்ட மருத்துவமனை மீது கோர்ட் அனுமதியுடன் திருச்சி ஸ்ரீரங்கம் மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டு உள்ளது. ஆனால் மகாலட்சுமி மீது உரிய நடவடிக்கை எடுத்து பல ஆண்களை காப்பாற்ற கோரி மன்னார்குடி காவல் நிலையத்தில ;அவர் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை
6 மாதத்திற்கு ஒரு திருமணம் செய்து வருகிறார். என்னிடம் நடந்து கொண்டது போலவே, எல்லோரிடத்திலும் நகை பணம் அபகரித்து சென்றுள்ளார். வெளியில் சொன்னால் அவமானம் என்று ஆண்கள் சொல்ல தயங்கி வருகின்றனர். அவரிடம் இருந்து ஆண்களை காப்பாற்ற நினைத்து புகார் அளித்துள்ளேன். ஆனால் எந்தவித நடவடிக்கையும் இல்லை. மேலும் தற்போது கருகலைந்ததால் தான் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறி பல நண்பர்களிடம் பணம் கேட்டு பெற்று வருகிறார். இவ்வாறு யாரும் ஏமாறக்கூடாது என்பதற்காகதான் நான் போராடி வருகிறேன் என்று அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக